Oct 28, 2026 - 01:57 PM

அவுஸ்திரேலியாவின் Southern Cross பல்கலைக்கழகம், NSBM Green பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இலங்கையில் இதுவரை வழங்கப்படாத முதலாவதும் ஒரே ஒரு இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டத்தை (Double Degree) இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நான்கு வருடக் கல்வித் திட்டத்தினூடாக மாணவர்கள் Bachelor of Business மற்றும் Bachelor of Information Technology ஆகிய இரு பட்டங்களையும் ஒரே நேரத்தில் பெறமுடியும். இக்கல்வித் திட்டம் NSBM Green பல்கலைக்கழக வளாகத்தில் கற்பிக்கப்படவுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள நிலைக்கு அமைய, ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் மூலம் குறிக்கப்பட்ட இந்த அறிமுக நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் இலங்கைகான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியு டக்வேர்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளுக்கும், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கல்விசார் கூட்டாண்மைக்கும் இத்திட்டம் கொண்டுள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்நிகழ்வு, NSBM Green பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாகவும் அமைந்தது.
எதிர்காலத் தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டம், வர்த்தக நுண்ணறிவு (Business Acumen) மற்றும் தரவு முகாமைத்துவம், செயற்கை நுண்ணறிவு (AI), இணையப் பாதுகாப்பு (Cyber Security) உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்கள் ஆகியவற்றின் அரிதான ஒருங்கிணைப்பை பட்டதாரிகளுக்கு வழங்கி அவர்களைத் தயார்படுத்துகிறது. இத்தகைய திறன்களை தொழில் வழங்குநர்கள் தற்போது பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மாணவர்கள் தனித்துவமான Southern Cross Model இற்கு அமைய (ஒரே நேரத்தில் குறைவான பாடப்பிரிவுகள் மற்றும் இறுதிப் பரீட்சைகள் இல்லாத முறை) கல்வியைக் கற்பதுடன், ஊதியத்துடனான தொழிற்முறைப் பயிற்சிகளையும், அவுஸ்திரேலிய Summer School இல் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர். இதன் மூலம் இலங்கையை விட்டு வெளியேறாமல், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அவுஸ்திரேலிய பட்டச்சான்றினை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
“இலங்கையின் மாணவர்களுக்கும், இரு பல்கலைக்கழகங்களுக்கும் இது மிகவும் பெருமைக்குரிய தருணமாகும். உலகத் தரம் வாய்ந்த அவுஸ்திரேலியப் பட்டத்தை இலங்கைக்கு நாம் நேரடியாக கொண்டு வந்து – திறன் படைத்த இளம் வயதினருக்கு சர்வதேச தகைமையை பெற்றுக் கொடுப்பதுடன், உள்நாட்டில் அவர்களுக்கு எதிர்காலத்திற்கு அவசியமான வணிக மற்றும் தொழினுட்பத்திறன்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழியமைத்துள்ளோம்.” Professor Tyrone Carlin, Vice-Chancellor, Southern Cross பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர் டிரோன் காலின் குறிப்பிட்டார்.
“எமது 10 வருட பூர்த்தியில், இலங்கையின் முதலாவது இரட்டை பட்டப் படிப்பை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகத் தரம், எதிர்காலத்திற்கு தயாரான கல்வி மற்றும் எமது மாணவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றில் NSBM’ இன் அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.”
பேராசிரியர் E. A. வீரசிங்க, உப வேந்தர், NSBM Green பல்கலைக்கழகம்.
“இலங்கையின் எதிர்கால சுபீட்சம் என்பது, டிஜிட்டல் திறன் படைத்த பணியாளர் குழுவினால் கட்டியெழுப்பப்படும். எமது இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக அறிவு ஆகிய இரண்டையும் எமது தாய்நாட்டிலேயே வழங்கும் இத்தகையதொரு கல்வித் திட்டம், எமது தேசிய டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை விரைவுபடுத்துகிறது. அந்த வகையில் இந்த கூட்டிணைப்பை நான் மனதார வரவேற்கிறேன்.”
எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்.
“இலங்கையின் முதலாவது இரட்டைப் பட்டப்படிப்புத் திட்டத்தை நனவாக்கியமை ஒரு பேரார்வமிக்க உழைப்பின் பலனாகும். திறமைமிக்க இலங்கை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அவுஸ்திரேலிய பட்டச்சான்றையும், எதிர்காலம் கோரும் ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் தொழில்நுட்பத் திறன்களையும், தாய்நாட்டை விட்டு வெளியேறாமல் வழங்குவது எமது எளிமையான மற்றும் தொலைநோக்குமிக்க இலட்சியமாக அமைந்திருந்தது.”
பேராசிரியர் தர்ஷன செதெர, இணை பீடாதிபதி (சர்வதேசம் மற்றும் ஈடுபாடுகள்), Southern Cross பல்கலைக்கழகம் – திட்டத்தை முன்னின்று செயற்படுத்தியவர்.

































