Oct 28, 2026 - 01:54 PM

தனது சர்வதேச சேவை வலையமைப்பைத் தொடர்ந்து விரிவாக்கி வரும் Vietjet, கொழும்பு – Ho Chi Minh City இடையிலான விமான சேவைக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட USD 90 முதலும், கொழும்பு – மாலைதீவு இடையிலான சேவைக்கு வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட USD 175 முதலும் தொடங்கும் Eco வகுப்புக் டிக்கட்டுகளுக்கான குறிப்பிட்ட கால சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பயணிகள் இந்தச் சலுகை அடிப்படையிலான Eco வகுப்புக் கட்டணங்களை இப்போதிலிருந்து 2026 நவம்பர் 1 ஆம் திகதி இரவு 21:30 மணி வரை (இலங்கை நேரப்படி) www.vietjetair.com எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது Vietjet Air மொபைல் app வாயிலாகப் பெற்றுக்கொள்ள முடியும். இச்சலுகையானது 2026 நவம்பர் 1 ஆம் திகதி முதல் 2027 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பயணிக்கும் விமானப் பயணங்களுக்குப் பொருந்தும் (Blackout dates பொருந்தும்). இது பயணிகள் தங்களின் அடுத்த சுற்றுலாப் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்குப் பரந்த வாய்ப்புகளை வழங்குகின்றது. மேலும், Vietjet இன் உலகளாவிய சேவை வலையமைப்பிற்குட்பட்ட வியட்நாம் உள்நாட்டு மற்றும் பிற சர்வதேச வழித்தடங்களிலும் இச்சலுகை வசதி அறிமுகமாகவுள்ளது (கட்டணங்கள் வழித்தடங்களுக்கு ஏற்ப மாறுபடலாம்).
ஆசிய பிராந்தியத்தில் தனது செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், Vietjet நிறுவனம் ஹனொய் – தைனான் இடையிலான புதிய சேவையை ஆரம்பித்துள்ளதுடன், Ho Chi Minh City – சியாங் மாய் இடையிலான சேவையையும் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இவ்வழித்தடங்கள் ஒவ்வொன்றிலும் வாரத்திற்கு நான்கு இருவழிச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதேவேளை, கொழும்பு ஊடான Ho Chi Minh City – மாலைதீவு இடையிலான புதிய சேவை 2026 டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய விமான சேவைகள் பயணிகளுக்குப் பரந்த மற்றும் இலகுவான பயணத் தெரிவுகளை வழங்குவதுடன், ஆசியா முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களை மேம்படுத்துவதாகவும் அமையும்.
இவ்விரிவாக்கமானது ஹனோய் மற்றும் Ho Chi Minh City இலிருந்து செபு, Ho Chi Minh City இலிருந்து கிளர்க், ஹனொயிலிருந்து அல்மாட்டி மற்றும் ஹனொயிலிருந்து பிராக் (Prague) ஆகிய சேவைகள் உட்பட, அதிகரித்து வரும் Vietjet இன் சர்வதேச இணைப்பு வலையமைப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. அயன வலய தீவுகளுக்கான சுற்றுலாக்கள் முதல் கலாசார அனுபவப் பயணங்கள் மற்றும் ஐரோப்பிய நகரக் கலைசார உலாக்கள் வரை, பயணிகள் தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பயணங்களைத் திட்டமிடுவதற்குப் பரந்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக இலங்கைப் பயணிகளுக்கு, இவ்வகையான உலகளாவிய சேவை வலையமைப்பை அடைவதற்கான முதன்மை வாயிலாகக் கொழும்பு திகழ்கின்றது.
குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கக்கூடிய சிறப்புச் சலுகைக் கட்டணங்களுடன், உங்களின் பயணக் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான தருணம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்றே உங்களின் Eco வகுப்புக் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து, Vietjet உங்களை அடுத்து எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைக் கண்டறியுங்கள்.
Vietjet பற்றி
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் 'சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம்' எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

































