Oct 28, 2026 - 01:51 PM

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படங்களின் உரிமைகள் மூலம், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.350 கோடி வர்த்தகம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் உரிமைகள் தொடர்பான வர்த்தகம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
அதன்படி, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தின் உரிமைகள் ரூ.150 கோடிக்கும், அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'சண்டியர்' படத்தின் உரிமைகள் ரூ.125 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தின் உரிமைகள் ரூ.75 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், இந்த மூன்று படங்களின் உரிமைகள் தொடர்பாக ஹொட்ஸ்டார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மொத்தம் ரூ.350 கோடி வர்த்தகம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படங்கள் வெளியாவதற்கு முன்பே அவற்றின் உரிமைகள் தொடர்பாகப் பெரிய தொகையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
எனினும், இந்த வர்த்தகத் தொகைகள் மற்றும் ஒப்பந்த விபரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது ஹொட்ஸ்டார் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

































