Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
விஜய் தன்னிடம் முதன்முதலில் கேட்ட கேள்வி குறித்து நடிகர் ஃபஹத் ஃபாசில் நெகிழ்ச்சி!

Oct 1, 2026 - 05:44 PM

விஜய் தன்னிடம் முதன்முதலில் கேட்ட கேள்வி குறித்து நடிகர் ஃபஹத் ஃபாசில் நெகிழ்ச்சி!
Mobitel Inner 1278

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நடிகரான ஃபஹத் ஃபாசில், தனது சிறுவயதில் நடிகர் விஜய்யைச் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவத்தை நேர்காணலொன்றில் பகிர்ந்துள்ளார். 

பிரபல இயக்குநர் ஃபாசில் இயக்கிய ‘காதலுக்கு மரியாதை’ (1997) திரைப்படத்தின் படப்பிடிப்பு, அவர்களது குடும்ப வீட்டில் நடைபெற்றபோது 12 அல்லது 13 வயதாக இருந்த ஃபஹத் ஃபாசில் விஜய்யைச் சந்தித்துள்ளார். 

அப்போது விஜய் தன்னிடம், "எதிர்காலத்தில் நடிகராக வருவீர்களா?" என்று முதன்முறையாகக் கேட்டதாக ஃபஹத் நினைவுகூர்ந்துள்ளார். 

அக்காலகட்டத்தில் திரைப்படங்கள் குறித்தே இருவரும் பேசியதாகவும், பின்னர் ஃபாசில் இயக்கிய ‘கண்ணுக்குள் நிலவு’ படப்பிடிப்பின்போது, தான் அடுத்து நடிக்கவிருந்த ‘குஷி’ திரைப்படம் குறித்து விஜய் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அந்தச் சிறுவயது சந்திப்பின்போது, விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் அளவுக்கு வளர்வார் என்று தான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை எனவும் ஃபஹத் ஃபாசில் குறிப்பிட்டுள்ளார். 

தனது முதல் திரைப்படமான ‘கையெத்தும் தூரத்து’ எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சில ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்ததாகவும், பின்னர் மலையாளத் திரையுலகிற்குத் திரும்பி வெற்றிகரமான நடிகராக உருவெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். 

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படம் நாளை (2)வெளியாகவுள்ள நிலையில், அதற்கான விளம்பர நிகழ்வுகளின்போதே அவர் இந்தக் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

Mobitel 1278