Sep 29, 2026 - 06:06 PM

புதிய உயர் ரக பயண வசதி அறிமுகத்துடன், கட்டுபடியான கட்டணத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிப் பிரயாண சேவைகளிலிருந்து உயர் ரகப் பயணச் சேவை வரை Uber-இன் சேவைகள் விரிவடைகின்றன
இலங்கையில் முதன்முறையாகத் தனது உயர் ரக பயண அனுபவத்தை வழங்கும் வகையில் Uber Black சேவையை Uber இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. “business class of back seats” என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Uber Black, கூடுதல் வசதி, தரம் மற்றும் மேம்பட்ட பயண அனுபவத்தை விரும்பும் பயணிகளுக்காக, உயர்தர வாகனங்கள் மற்றும் சிறந்த மதிப்பீடு பெற்ற ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இலங்கையில் நுகர்வோர் தங்கள் அன்றாட அனுபவங்களில் கூடுதல் தெரிவுகள் மற்றும் தரத்தை எதிர்பார்ப்பதால், உயர் ரக தீர்வுகள் மற்றும் அனுபவங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையப் பயணம், முக்கியமான வணிகக் கூட்டம், சிறப்பான நிகழ்வு அல்லது கூடுதல் வசதியுடன் பயணிக்க விரும்பும் தருணங்கள் என எதுவாக இருந்தாலும், தேவைக்கேற்பப் பெறக்கூடிய பயணச் சேவையில் Uber Black இந்தத் தெரிவை வழங்குகிறது.
Black சேவையின் அறிமுகத்துடன், இலங்கையில் பயணத் தேவைகளின் பரந்த அளவிலான தேவைகளை Uber இப்போது பூர்த்தி செய்கிறது - அதாவது, கட்டுபடியான கட்டணங்களுடனான மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிச் சேவைகள் முதல், அன்றாடப் பயணத்திற்கான கார்கள் மற்றும் Uber Black உடனான உயர் ரகப் பயணங்கள் வரை அனைத்தும் இதில் அடங்கும். பயணிகள் தங்கள் நிகழ்வு, விருப்பம் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சேவையை அதே Uber App மூலமாகவே தெரிவு செய்துகொள்ளலாம்.
Uber Black சேவையானது உயர்தர Compact SUV வாகனங்கள் மற்றும் SUV வாகனங்களின் பரந்த தெரிவையும், சிறந்த மதிப்பீடு பெற்ற ஓட்டுநர்களையும் கொண்டிருக்கும். பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கும் முன்பே, தங்களுக்கு விருப்பமான வாகன உட்புற வெப்பநிலையை ஏற்படுத்திக் கொள்ளல், உடைமைகளை எடுத்துச் செல்ல உதவி கோருதல் அல்லது உரையாடல் இன்றி அமைதியான பயணத்தைத் தேர்ந்தெடுத்தல் போன்ற வசதிகள் மூலம் தங்கள் பயணத்தை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
இது குறித்து Uber Sri Lanka நிறுவனத்தின் Mobility பிரிவுக்கான முகாமையாளர் கௌசல்யா குணரத்ன கூறியதாவது: “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் பல்வேறு கட்டண மட்டங்களில் நம்பகமான போக்குவரத்து சேவையை அதிகமான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலேயே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பயணிகளின் வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களுக்கு ஏற்ற தனித்துவமான அனுபவங்களை வழங்குவதே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக உள்ளது. அந்தப் பயணத்தில் Uber Black ஒரு முக்கிய சாதனை மைல்கல்லாக அமைந்துள்ளது. அத்துடன், இலங்கையில் தேவைக்கேற்ற போக்குவரத்து சேவையிலிருந்து பயணிகள் எதிர்பார்க்கக்கூடிய தரநிலைகளைத் தொடர்ந்து உயர்த்துவதற்கான எங்கள் இலட்சியத்தையும் இது பிரதிபலிக்கிறது.































