Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா? - மூடப்படும் பாடசாலைகள் குறித்து விளக்கம்

Sep 29, 2026 - 05:23 PM

பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா? - மூடப்படும் பாடசாலைகள் குறித்து விளக்கம்
Mobitel Inner 1278

அரசாங்கம் எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், பாடசாலைகளை மூடுவது, கல்வி மறுசீரமைப்புகள் மற்றும் பாடசாலை நேர மாற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். 

எந்தவொரு பாடசாலையையும் உடனடியாக மூடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், கடந்த பல வருடங்களாக மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

60 அல்லது 70 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சில பாடசாலைகளின் அமைவிடமும், தற்போதைய மக்கள் தொகை பரம்பலும் வேறுபட்டுள்ளன. 

மாணவர்கள் மிகக் குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்துக் கோட்ட மற்றும் வலய மட்டத்தில் அறிக்கைகள் கோரப்பட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பாடசாலையை வெறுமனே திறந்து வைப்பதை விட, நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தரமான மற்றும் வசதிகள் நிறைந்த கல்வியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அத்துடன் கல்வி அமைப்பில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக மிக விரைவில் 3,000 புதிய ஆசிரியர்களைக் கல்வி அமைப்பில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைக்குக் கணிசமான தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

கல்வி மறுசீரமைப்பு என்பது பாடத்திட்டங்களை மாற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், பாடசாலைகளுக்குத் தேவையான பௌதிக மற்றும் மனித வளங்களை வழங்குதல், கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியதாகவே அமையும். 

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டளவில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். 

மேலும் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரத்தை மாற்றுவது தொடர்பாகத் தற்போது கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் எந்தக் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும், இது குறித்துக் கல்வி அமைச்சு எதிர்காலத்தில் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278