Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
Groundworth இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலை அண்மித்து ‘The Highway’ – உயர்தர காணி அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்

Sep 28, 2026 - 10:07 AM

Groundworth இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலை அண்மித்து ‘The Highway’ – உயர்தர காணி அபிவிருத்தித் திட்டம் அறிமுகம்
Mobitel Inner 1278

Groundworth (Pvt) Ltd இனால் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை இடம்மாறலுக்கு சுமார் 1 கிலோமீற்றர்கள் தொலைவில் பிரத்தியேகமான காணிப் பகுதியில் “The Highway by Groundworth” எனும் காணி அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (E01) மற்றும் வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலை (E02) ஆகியவற்றை இலகுவில் அணுகக்கூடிய வகையில் சௌகரியமான வதிவிட காணித் துண்டுகளை இதனூடாக வழங்க முன்வந்துள்ளது. 

துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள The Highway, குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய தேவைகள், பாடசாலைகள், சுகாதார சேவைகள் மற்றும் பொதுப்போக்குவரத்து வசதிகளை அருகில் வழங்குவதுடன், கொழும்பு, காலி, மாத்தறை, கடவத்தை மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களுக்கான இலகுவான போக்குவரத்து இணைப்பையும் வழங்குகின்றது. மேலும், இத்திட்டம் ஹை லெவல் வீதிக்கு (A4) அருகில் அமைந்துள்ளதால், பன்னிப்பிட்டிய மற்றும் கொழும்புக்கு இடையிலான மேலதிகப் போக்குவரத்து இணைப்பையும் வழங்குகின்றது. 

இந்த அறிமுகம் தொடர்பாக Groundworth Group இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், இணைத் தாபகருமான கசுன் அத்தரஹென்னதி கருத்துத் தெரிவிக்கையில், “இருப்பிடமே நிலத்தின் மதிப்பைத் தீர்மானிக்கும் முதன்மை காரணியாக அமையும் வகையில் ஒரு வாய்ப்பை உருவாக்க நாங்கள் விரும்பினோம். The Highway திட்டமானது, ஒரு நிலப்பரப்பு வழங்கக்கூடிய மிகச்சிறந்த நடைமுறை நன்மைகளுள் ஒன்றான “போக்குவரத்து இணைப்பு வசதியை” மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலைப் பரிமாற்றத்திலிருந்து வெறும் 1 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால், எமது வாடிக்கையாளர்கள் பாடசாலைகள், சுகாதார சேவைகள், போக்குவரத்து மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான வசதிகளைத் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் பெற்றுக்கொள்வதுடன், நாட்டின் முக்கிய இடங்களுக்கும் விரைவாகச் சென்றடைய முடியும்.” என்றார். 

The Highway, மாக்கும்புர பன்முறைப் போக்குவரத்து மையத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலும், கொட்டாவ நகரம் மற்றும் சந்திப்பிலிருந்து சுமார் 2.5 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்திட்டத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் Softlogic GLOMARK விற்பனை நிலையம் அமைந்துள்ளதால், சுப்பர் மார்க்கெட்கள், வங்கிகள், மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்கான வசதிகளை எளிதாக அணுக முடியும். கொட்டாவ தர்மபால மகா வித்தியாலயம், ஆனந்தா கல்லூரி கொட்டாவ, லீட்ஸ் சர்வதேச பாடசாலை மற்றும் லூவர் கல்லூரி உள்ளிட்ட பல பிரபல பாடசாலைகள் சுமார் 2–3 கிலோமீற்றர் சுற்றளவிலும், ஹோமாகம ஆதார வைத்தியசாலை சுமார் 2.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. 

The Highway திட்டம், 6 பேர்ச் முதல் ஆரம்பிக்கும் அளவுகளைக் கொண்ட 12 நிலத்துண்டுகளை உள்ளடக்கியுள்ளது. தெளிவான உறுதிப்பத்திரங்கள், 22 அடி முகப்பு வீதி, குழாய் வழி நீர் மற்றும் மின்சார இணைப்புகள், மற்றும் திட்டமிடப்பட்ட குடியிருப்புச் சூழல் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். நன்கு இணைக்கப்பட்ட ஓர் இடத்தில் உயர்தர வீடுகளைக் கட்ட விரும்புபவர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காணியின் விலை ஒரு பேர்ச்சிற்கு LKR 2.1 மில்லியன் முதல் ஆரம்பிக்கின்றது. 

நேரடி பார்வையிடல்களுக்கு The Highway தற்போது திறக்கப்பட்டுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்டளவு காணித் துண்டுகள் மாத்திரம் எஞ்சியுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

Mobitel 1278