Sep 28, 2026 - 12:07 PM

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தொன்றில் பூசகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பூசகர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வீதியை நோக்கி வந்த இளைஞருடன் மோதி வீதியில் விழுந்துள்ளார். இதன்போது, அவருக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று பூசகர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த பூசகரின் சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.































