Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வடக்கு
அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்!

Sep 23, 2026 - 04:28 PM

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்!
Mobitel Inner 1278

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

"சகோதரர் சிவராசா அனோஜன் குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் புனித இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் உறுதியாக நிற்கின்றது." 

அனோஜனின் விவகாரத்தை அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது உயிரைப் பாதுகாப்பதற்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அனைத்துச் சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சிகளையும் முன்னெடுப்பது.இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் வெறுப்பையும் தூண்ட முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளிலிருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது. 

இவை இரண்டுமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் அணுகப்பட வேண்டிய முக்கிய பணிகளாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதும், அதேவேளை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் எனத் தனது ஊடக அறிக்கையில் முழுமையாக வலியுறுத்தியுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278