Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட இரு பிரிவினர்

Sep 23, 2026 - 04:20 PM

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட இரு பிரிவினர்
Mobitel Inner 1278

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள இரு பிரிவினர் குறித்து பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது. 

'தெரண பிக் ஃபோகஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி. ஜே. சேனாதீர, 2025 ஜூன் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள், வைத்திய பரிந்துரையின் அடிப்படையில் ஆசனப்பட்டி அணி முடியாதவர்கள் மற்றும் 135 சென்டிமீட்டருக்கு குறைந்த உயரம் கொண்ட நபர்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 

இருப்பினும், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு அவர்களின் கைகளிலேயே உள்ளதால், பாதுகாப்பு கருதி இத்தகைய நபர்களும் இடுப்புப் பகுதியில் அணியும் 'லேப் பெல்ட்' (Lap Belt) அணிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

"2025 ஜூன் 25 ஆம் திகதியிட்ட வர்த்தமானியில் யாருக்கு ஆசனப்பட்டி அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வைத்திய சான்றிதழின் படி ஆசனப்பட்டி அணிவது பொருத்தமானது அல்ல எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் அவர்களுக்கும் விலக்கு உண்டு. 

பொதுவாக வைத்திய சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று கூறினாலும், ஒருவரைப் பார்த்தவுடனேயே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது எமக்குத் தெரிகிறது. அதேபோல 135 சென்டிமீட்டருக்கு குறைந்த உயரம் கொண்டவர்களும் இதை அணியத் தேவையில்லை. அதாவது 4.5 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கும், உயரம் குறைந்தவர்களுக்கும் ஏன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றால், அவர்கள் வழக்கமான ஆசனப்பட்டி அணியும்போது அது அவர்களின் கழுத்து வழியே செல்லும். உயரமான நபர்களுக்கு அது உடலின் நடுப்பகுதி வழியே செல்லும். கடுமையான விபத்து நேரிடும் போது, அது நேரடியாக அவர்களின் கழுத்தை இறுக்கிவிடும். இதனாலேயே அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்கள் ஆசனப்பட்டி அணியவே கூடாது என்பதல்ல. அவர்கள் லேப் பெல்ட் அணிந்து கொள்ள முடியும். இதனால் பின்சீட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலையில்லை, ஏனைய அனைவரும் கட்டாயம் ஆசனப்பட்டி அணிய வேண்டும். 

பலர் அவர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லையா எனக் கேட்கிறார்கள். ஒரு சிறுவனை அழைத்துச் செல்லும்போது அச்சிறுவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியது பெற்றோரின் பொறுப்பாகும். பாதுகாப்பு என்பது வெளியில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் பொறுப்பல்ல, அதை நீங்களே உறுதி செய்ய வேண்டும்." என்றார். 

இதேவேளை, நிலவும் மழைக்கால வானிலையைக் கருத்திற் கொண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையே சரியான இடைவெளியைப் பேணுவது மிகவும் முக்கியமானது என தெரிவித்த அவர், சாதாரண நாட்களில் 80 மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும் எனக் கூறப்பட்டாலும், மழைநாட்களில் 100 மீட்டர் இடைவெளியைப் பேணுவதில் தவறு ஏதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார். 

அதுமட்டுமன்றி, அதிவேக நெடுஞ்சாலைகளில் இடதுபுறப் பாதையிலேயே வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என்றும், முந்திச் செல்லும்போது வலதுபுறப் பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அவர், அதிவேக வீதிகளில் தேவையான அளவை விட மிகவும் மெதுவாகச் செல்லும் வாகனங்கள் குறித்தும் விரைவில் அவதானிக்கப்படும் என்றார். 

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கு குறைந்தபட்ச வேகக் கட்டுப்பாடொன்றை விதிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி. ஜே. சேனாதீர, வீதியில் அலட்சியமாக வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளிகளை பொலிஸாரின் 070 47 55 600 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278