Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
இலங்கையின் விவசாய சமூகத்திற்கான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வலுப்படுத்தும் DIMO Care Camp 2026

Sep 23, 2026 - 04:02 PM

இலங்கையின் விவசாய சமூகத்திற்கான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வலுப்படுத்தும் DIMO Care Camp 2026
Mobitel Inner 1278

DIMO Agribusinesses நிறுவனம், 2026 ஆகஸ்ட் 08 முதல் செப்டெம்பர் 15 வரை நாடு முழுவதிலும் உள்ள 38 இடங்களில் 38 நிகழ்வுகளை முன்னெடுத்ததன் மூலம், DIMO Care Camp 2026 நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. எந்தவொரு வர்த்தகநாமத்தை சேர்ந்த அல்லது மாதிரிகளையும் சேர்ந்த உழவு இயந்திரங்களுக்குமான இந்த திட்டமானது, நாடு முழுவதிலும் உள்ள விவசாய சமூகங்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவதற்கான DIMO Agri Machinery பிரிவின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகின்றது. 

குருணாகல், அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, மொணராகலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தளை உள்ளிட்ட முக்கிய விவசாய பிராந்தியங்களில் இந்த DIMO Care Camp செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அத்தியாவசிய சேவைகளை விவசாய சமூகங்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்ப்பதன் மூலம், இந்த முயற்சியானது DIMO Agri Machinery இன் நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பின் பலத்தையும் அணுகல் தன்மையையும் முன்னிலைப்படுத்தியது. 

பங்கேற்பாளர்கள் முழுமையான உழவு இயந்திர ஆய்வுகள், சேவை மற்றும் பழுதுபார்ப்புகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அத்தியாவசிய உதிரிப்பாகங்களை இலகுவாக பெறும் வாய்ப்பு ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர். உழவு இயந்திர உரிமையாளர்களுக்கு முறையான பராமரிப்பு குறித்த நடைமுறை வழிகாட்டலையும் DIMO நிறுவனத்தின் அனுபவமிக்க தொழில்நுட்பக் குழுவினர் வழங்கினர். இது அவர்களின் இயந்திரங்களின் செயல்திறன், அவற்றின் திறன் மற்றும் ஆயுட்காலத்தை மேம்படுத்த உதவியது. 

இயந்திரங்கள் தொடர்பான சேவைகளுக்கு அப்பால், பங்கேற்பாளர்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை, உடல் எடை (BMI) மதிப்பீடுகள் மற்றும் குருதியின் குளுக்கோஸ் அளவுக்கான பரிசோதனை உள்ளிட்ட இலவச சுகாதாரப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் விளையாட்டுகள் மற்றும் பரிசுகள் மூலம் பங்கேற்பாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவமும் ஏற்படுத்தப்பட்டதுடன், DIMO Care Camp நிகழ்வை வெறுமனே ஒரு சேவை வழங்கும் முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாக மாற்றியது. சிறந்த இயந்திரப் பராமரிப்பு மற்றும் தகவலறிந்த விவசாய நடைமுறைகள் மூலம் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வழிகளை அடைவதற்குமான வழிகாட்டல்களை பங்கேற்பாளர்கள் பெற்றதுடன் அது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. 

எதிமலே தொழிற்பயிற்சி மையத்தின் விவசாய இயந்திரவியல் மாணவர்களுக்கு இந்த நிகழ்வின் போது ஒரு விசேட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது. நடைமுறை ரீதியான தொழில்நுட்பப் பயிற்சியுடன், அவர்களின் எதிர்கால தொழில் வளர்ச்சி மற்றும் விவசாய இயந்திரங்கள் துறையில் தொழில்முறை மேம்பாட்டிற்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்த வழிகாட்டலையும் இந்த அமர்வு வழங்கியது. இந்த முயற்சியானது, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும், இலங்கையின் விவசாயத் துறையில் அடுத்த தலைமுறை திறமையான நிபுணர்களை ஆதரிப்பதற்குமான DIMO நிறுவனத்தின் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. 

இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, நாட்டின் எந்தவொரு வர்த்தகநாமத்திலும் அல்லது மாதிரியிலும் அமைந்த உழவு இயந்திர உரிமையாளர்களுக்கும் நம்பிக்கையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை இலகுவாக அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டதே ‘DIMO Care Camp’ ஆகும். விவசாய சமூகங்களுக்கான நடைமுறை ரீதியான ஆதரவை விவசாய இயந்திரவியல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளுடன் இணைப்பதன் மூலம், பரந்த விவசாய சூழலை வலுப்படுத்தவும், இத்துறையில் அதிக உற்பத்தித்திறன் மற்றும் நிலைபேறான தன்மைக்கு பங்களிக்கவுமான இலக்கை DIMO நிறுவனம் கொண்டுள்ளது. என்றார். 

இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவானது, நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கும் அவர்களின் வளர்ச்சியடைந்து வரும் செயற்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமான DIMO நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. DIMO Care Camp போன்ற திட்டங்கள் மூலம், விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் விரிவான சேவை வலையமைப்புடன் இணைத்து, இலங்கையின் விவசாயத் துறைக்கு உலகப் புகழ்பெற்ற விவசாயத் தீர்வுகளை DIMO தொடர்ச்சியாக வழங்கி, இத்துறையை முன்னேற்றி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

Mobitel 1278