Sep 22, 2026 - 09:55 AM

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
சென்னையில் இதனை முதலமைச்சர் விஜய் ஆரம்பித்து வைக்கிறார்.
இந்த திட்டம் இன்று தொடங்கப்படுவது குறித்து மாணவர்களின் பெற்றோரின் கையடக்க தொலைபேசி எண்ணுக்கு முதலமைச்சர் விஜய் பெயரில் குறுந்தகவல் நேற்று வந்தது.
அதில், 'அன்பார்ந்த பெற்றோருக்கு வணக்கம்! பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் உற்சாகத்துடன் பாடசாலைக்கு வருகை புரிந்து, சிறப்பாக கல்வி கற்பதற்கு ஏதுவாக சத்தான, சுவையான காலை உணவு 22 ந் திகதி முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரியமுடன், ஜோசப் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர்'. என்று இடம் பெற்றுள்ளது.





























