Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
அனோஜனின் நிலை தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்!

Sep 22, 2026 - 09:39 AM

அனோஜனின் நிலை தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தலாம்!
Mobitel Inner 1278

​''சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். 

​கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு மேலும் உரையாற்றிய அவர், 

​சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை அவமதித்து எழுதுவதும், அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களின் நபிகள் நாயகம் அவர்களை அவமதித்து எழுதுவதும் இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள்தான். ஆனால், ஒரு பதிவுக்குப் பதிலாக மற்றொரு பதிவு எழுதப்பட்ட நிலையில், இன்று ஒரு மனிதனின் உயிரே கேள்விக்குறியாகியுள்ளது. இவர் எழுதினார், அவர் பதில் எழுதினார். இவருக்குத் தலை போகிறது, அவர் வீட்டிலேயே இருக்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது? 

​அனோஜனுக்கு எதிரான பதிவை மொழிபெயர்த்துக் கொடுத்தவர்களும் தமிழ் பேசும் சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதன் தாக்கம் தமிழ் – முஸ்லிம் உறவில் ஆழமான விரிசலை ஏற்படுத்தக்கூடும். சிறிய பொறிகளே பெரும் தீயாக மாறுகின்றன. எனவே, அனோஜன் விடுதலை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைவரும் அதற்காகப் பிரார்த்திக்க வேண்டும். 

​மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் கடந்த கால அரசுகளைப் போலவே இனவாதப் போக்கைக் கையிலெடுத்திருக்கிறது. திலீபனின் நினைவேந்தலில் ஒலிபெருக்கிப் பெட்டிகளைக் கூட பொலிஸார் பறித்துச் செல்லும் நிலையே காணப்படுகிறது. அப்படியானால் இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பினர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

Mobitel 1278