Sep 21, 2026 - 08:32 PM

கடவத்தை - வேபட பகுதியில் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கடவத்தை - வேபட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது ஹெரோயின், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் ஹெரோயின், T-56 தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 T-கட்டஸ் ரக துப்பாக்கிகள், 12-போர தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய 2 உள்நாட்டு துப்பாக்கிகள் , பல்வேறு வகையான 600 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 2 கைவிலங்குகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பேலியகொடை மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





























