Sep 21, 2026 - 05:14 PM

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான "லொகு பெட்டி" என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சுமார் 350 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைத் முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 பேர்ச்சஸ் காணியும் அதில் கட்டப்பட்டுள்ள வீடொன்றுமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியும் வீடும் மத்துகம, கெப்பட்டியகஹலன்ன பகுதியில் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் விக்ரமசேகரவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





























