Sep 18, 2026 - 11:54 PM

தற்போதைய அரசாங்கம் ஒரு கட்சி முறைமையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லத் தயாராகும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் திகதி எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பாராளுமன்ற சந்திப்புக்கு அருகில் ஒன்று கூடவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
சுதந்திர செயல்பாட்டு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பிரதிநிதிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.





























