Sep 18, 2026 - 10:08 PM

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வேலைநிறுத்தம் வெற்றியளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அதன் தலைவர் சுமேத சோமரத்ன, முன்னர் தொழிற்சங்கங்கள் செய்ததைப் போன்று மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்கி சதி வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளும் நோக்கம் தமது சங்கத்திற்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.





























