Nov 6, 2026 - 11:27 AM

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தைத் துறையில் முன்னோடியாகத் திகழும் நிறுவனமுமான First Capital Holdings PLC, தனது பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதில் கையாண்டு வரும் புத்தாக்கமான அணுகுமுறை மற்றும் நிறுவனத்தின் கற்றல், வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பிற்காக இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி கல்வியகத்தினால் (SLITAD) தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருது, பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக First Capital முன்னெடுத்து வரும் ஆக்கபூர்வமான மற்றும் புத்தாக்கமான அணுகுமுறையை அங்கீகரிக்கின்றது. அத்துடன் இம் முன்முயற்சிகள், நிறுவனத்தின் பணியாளர்களின் ஆற்றல்களை வலுப்படுத்துவதற்கும், நிறுவனத்திற்குள் கற்றல் மற்றும் அபிவிருத்தி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் பங்களித்துள்ளன.
மேலும் இவ் விருது, பணியாளர்கள் தமது திறன்களை விரிவுபடுத்தவும், புதிய சவால்களை ஏற்றுக்கொள்ளவும், நிறுவனத்தின் மாறிவரும் தேவைகள் மற்றும் பரந்த மூலதனச் சந்தைத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தம்மை மேம்படுத்திக்கொள்ளவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற திறன்களை வளர்ப்பதில் First Capital தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இந்த அங்கீகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த First Capital Holdings PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டில்ஷான் வீரசேகர, “எந்தவொரு நிறுவனத்தின் வலிமையும் அதன் பணியாளர்களின் திறன்களுடன் நெருங்கிய தொடர்புடையது. First Capital இல், எமது பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை எமது எதிர்காலத்திற்கான தொடர்ச்சியான முதலீடாகவே கருதுகின்றோம். SLITAD வழங்கியுள்ள இந்த அங்கீகாரம், எமது பணியாளர்கள் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ளவும், தமது திறன்களை வளர்த்துக்கொள்ளவும், எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சவால்களுக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ளவும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு நாம் வழங்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.” என்றார்.
First Capital Holdings PLC இன் மனித வளப்பிரிவின் தலைவர் சாமர புசெல்ல கருத்துத் தெரிவிக்கையில், “First Capital இல் கற்றல் என்பது வழமையான பயிற்சி அமர்வுகளுக்கு மட்டுப்படுத்தப்படாமல், எமது பணியாளர்களின் அன்றாடப் பணிகள், வளர்ச்சி மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக அமைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். பணியாளர்கள் தமக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொண்ட அறிவைத் தமது பணிகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம். நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் நாம் தொடர்ந்து வளர்த்து வரும் கற்றல் மற்றும் அபிவிருத்திக் கலாசாரத்திற்குக் கிடைத்துள்ள ஊக்கமளிக்கும் அங்கீகாரமாக இத் தங்க விருதை நாம் கருதுகின்றோம்.” என்றார்.
கற்றல் மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் மூலம், First Capital நிறுவனத்தின் பல்வேறு பணிநிலைகளில் உள்ள பணியாளர்கள் தமது திறன்களை மேலும் மேம்படுத்திக்கொள்ளவும், மூலதனச் சந்தைத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைத் தயார்படுத்திக்கொள்ளவும் நிறுவனம் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
தொடர்ச்சியான கற்றல், புத்தாக்கம் மற்றும் தொழில்சார் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கலாசாரத்தை வளர்ப்பதில் First Capital கொண்டுள்ள அர்ப்பணிப்பை இத் தங்க விருது மேலும் உறுதிப்படுத்துகின்றது. அத்துடன், இலங்கையில் கற்றல் மற்றும் அபிவிருத்தி நடைமுறைகளை மேலும் மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் பங்களிப்பை இது எடுத்துக்காட்டுகின்றது.
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, 'செயலாற்றுகை முதலில்' எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது.
மூலதனச் சந்தைத் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட First Capital, தொழில்துறை சார்ந்த நிபுணத்துவத்தையும் சந்தையில் தனது இருப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. First Capital Holdings PLC மற்றும் அதன் துணை நிறுவனமான First Capital Treasuries PLC ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய ‘A+’ என்னும் நிறுவன மதிப்பீடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. First Capital Holdings PLC, 2026 ஆம் ஆண்டில், World Economic Magazine Awards விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில், Superbrands அந்தஸ்தைப் பெற்ற இலங்கையின் முதலாவது முதலீட்டு நிறுவனமாக விளங்கியமை அதன் வலுவான வர்த்தகநாம இருப்பையும் சந்தை நிலைப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
First Capital Holdings PLC, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE), இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றின் ஒழுங்குமுறைகள் மற்றும் தேவைகளுக்கு அமைவாக, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைக் கட்டமைப்பின் கீழ் செயற்படுகிறது.

































