Nov 6, 2026 - 11:56 AM

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தனது திரைப்பயணத்தில் மற்றொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நவம்பர் 23 ஆம் திகதி நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கும் பிரபலங்களில் ஒருவராக நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்க உள்ளார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார்.
இதற்கு முன்னர், 2016 இல் பிரைம்டைம் எம்மி விருது வழங்கும் மேடையில் நடிகை பிரியங்கா சோப்ரா விருது வழங்கியுள்ளார்.
இருப்பினும், சர்வதேச எம்மி விருது வழங்கும் மேடையில் இந்த கௌரவத்தைப் பெறும் முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதி ஆவார்.
சர்வதேச எம்மி விருதுகள் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்பட்டு, ஒளிபரப்பப்படும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்கள் மற்றும் கலைஞர்களை கவுரவிப்பதற்காக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பிளாக்பஸ்டர் திரில்லர் படமான 'மகாராஜா' ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது.
ஒரு முன்னணி ஹாலிவுட் ஏஜென்சி ரீமேக் உரிமைகளுக்காக தங்களை அணுகியதாக தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இப்படம் சீனாவில் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 91.65 கோடி ரூபா பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ரீமேக்கில் ஹாலிவுட் நட்சத்திரம் மேத்யூ மெக்கனாஹி நடிக்கக்கூடும் என்று சமூக ஊடகங்களில் யூகங்கள் எழுந்து வருகிறது.
மறுபுறம் பாலாஜி தரனீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்றது.
































