Nov 6, 2026 - 11:45 AM

இலங்கையின் ஆயுள் காப்புறுதிச் சந்தையில் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு விற்பனைத் துறை நிபுணர்கள், தமது சிறப்பான செயல்திறனுக்காக தேசிய ரீதியிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) 2026 தேசிய விற்பனை விருதுகளில் ஆறு விருதுகளை வென்று இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
மூன்று பிரிவுகளின் கீழ் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விற்பனைக் குழுவினரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதுகளை வென்றவர்கள் நிறுவனத்தின் வென்னப்புவ, மித்தெனிய, நீர்கொழும்பு மற்றும் நுகேகொடை கிளைகளைச் சேர்ந்தவர்களாவர்.
வென்னப்புவ கிளையைச் சேர்ந்த லசித பெர்னாண்டோ, பிராந்திய முகாமையாளர் பிரிவில் வெள்ளி விருதை வென்றார், அதேவேளை மித்தெனிய கிளையைச் சேர்ந்த ஜெ.ஏ ரத்னசிறி, விற்பனை அதிகாரி பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றதுடன், நீர்கொழும்பு கிளையைச் சேர்ந்த கே.டி.எல்.என். இனோகா, அதே விற்பனை அதிகாரி பிரிவில் சிறப்புத் தகுதிகாண் விருதைப் பெற்றார்.
முன்னணி ஊழியர் பிரிவில், நீர்கொழும்பு கிளையைச் சேர்ந்த ரஷ்மி சூரவீர வெண்கல விருதை வென்றார், அதேவேளை நுகேகொட கிளையைச் சேர்ந்த குமுதுனி ரத்நாயக்க மற்றும் கொழும்பு விசேட விற்பனை கிளையைச் சேர்ந்த ஷெர்மன் ருக்ஷான் ஆகியோர் தலா சிறப்புத் தகுதிகாண் விருதுகளை வென்றனர்.
செலிங்கோ லைஃப் நிறுவனம், முன்னர் தேசிய விற்பனை மாநாடு (NASCO) விருதுகள் என அழைக்கப்பட்ட SLIM தேசிய விற்பனை விருதுகளில் 2011 ஆம் ஆண்டு முதல் பங்கேற்று வருகின்றது. நாடு முழுவதிலும் உள்ள கிளைகளைச் சேர்ந்த அதன் ஊழியர்கள், பல ஆண்டுகளாகப் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இவ்விருதுகளில் நிறுவனம் தொடர்ச்சியாகக் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றமை, அதன் விற்பனையாளர்களின் வலிமையையும் திறனையும் பிரதிபலிக்கின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான பிராண்ட் Brand Finance இன் நாட்டின் 100 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் தரவரிசையில் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட செலின்கோ லைஃப், 2026 SLIM காந்தார் மக்களின் விருதுகள் (2026 SLIM Kantar People’s Awards) விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 20-வது ஆண்டாக 'ஆண்டின் மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர்' என்ற விருதை முன்னெப்போதும் இல்லாத வகையில் வென்றுள்ள செலிங்கோ லைஃப், World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் செலிங்கோ லைஃப் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலட்சியங்களைப் பாதுகாத்து, அவற்றுடன் தொடர்புடைய இடர்களைக் குறைக்கும் வகையில், நிறுவனம் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.
































