Nov 5, 2026 - 10:06 PM

வங்கக்கடலில் எதிர்வரும் 13- ஆம் திகதி குறைந்த காற்றழுத்த பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற்து.
இதற்கிடையே, அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வருகிற 13-ஆம் திகதி வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழ்வுப்பகுதி, தாழமுக்கமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் இதுவரை 3 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாகின. அதில் 2 புயலாக வலுப்பெற்று ஆந்திர பகுதிகளில் கரையை கடந்தது.
தற்போது உருவாக உள்ள தாழ்வுப்பகுதி 4-வது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும். இந்த தாழ்வுப்பகுதி, அடுத்தடுத்து வலுப்பெற்று புயலாக உருவெடுக்குமா? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் அடுத்தடுத்த அறிவிப்புகளில் தகவல் வெளியிடும்.
































