Nov 5, 2026 - 09:00 PM

நாடே ஒன்றாக தேசிய இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகளின் போது, இதுவரை 438,330 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இன்று (05) நடைபெற்ற 'நாடே ஒன்றாக' தேசிய இயக்கத்தின் ஆன்மீக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள மொத்த சந்தேகநபர்களில் 405,268 பேர் ஐஸ் மற்றும் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் 5 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 13 சிறுவர்களும் அடங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதுதவிர, மேற்கூறிய மொத்தக் கைதுகளில் 21 வயதுக்குட்பட்ட 11,737 இளைஞர்கள் உள்ளதாகவும், அவர்களில் 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,889 பேரும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 பேரும் அடங்குவதாகவும் அவர் மேலும் வெளிப்படுத்தினார்.
நாட்டிற்குள் சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதில் விரைவான வளர்ச்சி காணப்படுவதாகத் தரவுகளை மேற்கோள் காட்டி ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த போதிலும், 2023 இல் அந்த எண்ணிக்கை 303 ஆகவும், 2024 இல் 754 ஆகவும் அதிகரித்துள்ளன.
2025 ஆம் ஆண்டாகும் போது அது 1,824 ஆக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
எமது சிறு குழந்தைகள் இந்த பேரழிவிற்கு இரையாகியுள்ளனர். இந்தப் பேரழிவு எமது நாட்டின் முழு எதிர்காலத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தி வருகிறது.
இந்தப் பேரழிவைத் தோற்கடிப்பதற்காக, ஆரம்பத்தில் எமது நாட்டிலிருந்து இதனை முற்றாக ஒழிப்பதாக மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
































