Nov 3, 2026 - 09:30 AM

பிரதிசபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 11.30 மணிக்கு 1983 கறுப்பு யூலை துன்பியல் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடுவதற்கும் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அதன் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவாறு அன்றைய தினம் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமலிருக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,

































