Nov 3, 2026 - 11:33 AM

இலங்கையின் முக்கியமான கலாசார நிகழ்வுகளில் ஒன்றான கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் 250-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ தன்னார்வலர்கள் பங்கேற்றனர். PET போத்தல் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், கண்டி எசல பெரஹரா இடம்பெற்ற பாதையிலிருந்து 45,000-க்கும் மேற்பட்ட PET போத்தல்கள் சேகரிக்கப்பட்டன. அபர்டீன் ஹோல்டிங்ஸ் [Aberdeen Holdings] நிறுவனத்தின் ஓர் அங்கமான நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ் [Neptune Recyclers], இந்த PET போத்தல் சேகரிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியது.
மத்திய மாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் தலைமையில் நடைபெற்ற இந்நடவடிக்கையில், ஸ்ரீ தலதா மாளிகை, கொகா-கோலா பெவெரேஜஸ் ஸ்ரீலங்கா [Coca-Cola Beverages Sri Lanka], நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ் [Neptune Recyclers], CFC Health Care, சியத டீவி, சியத எப் எம் , கண்டி சிட்டி சென்டர் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களும், அரச ஒருங்கிணைப்பு அமைப்புகளும், பல்கலைக்கழக மாணவர் தன்னார்வலர்களும் இணைந்து செயற்பட்டனர்.இந்தப் பல்தரப்பு ஒத்துழைப்பு முயற்சி, நாட்டின் முக்கியமான கலாசார நிகழ்வொன்றுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பொறுப்பான கழிவு முகாமைத்துவத்தையும் இணைக்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்தது.
கண்டி எசல பெரஹரா நடைபெற்ற பாதை முழுவதும் PET போத்தல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் பொது இடங்களில் வீசப்பட்ட PET போத்தல்கள் மீட்கப்பட்டு, அவை முறையான மீள்சுழற்சி மற்றும் மீட்புச் செயல்முறைகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. பெருமளவான மக்கள் ஒன்றுகூடும் இத்தகைய முக்கிய நிகழ்வுகளின்போது உருவாகும் கழிவுகளைக் குறைப்பதுடன், கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுதல், மீள் சுழற்சிக்குத் தகுந்த பொருட்களை மீட்டெடுத்தல் மற்றும் மீள்சுழற்சி செய்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக அமைந்தது.பல தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி, கண்டி நகரின் பொது இடங்களை தூய்மையாகப் பேணுவதற்குப் பங்களித்ததுடன், மீள்சுழற்சிக்குத் தகுதியான PET போத்தல்கள் சுற்றுச்சூழல் கழிவுகளாக மாறாமல் மீண்டும் மீள்சுழற்சி செயன்முறைக்குள் கொண்டு வரப்படுவதையும் உறுதி செய்தது.
இலங்கையின்மீள் சுழற்சி மற்றும் வளங்களை மீட்டெடுக்கும் துறையில் இயங்கி வரும் நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ் , பொறுப்பான கழிவு முகாமைத்துவத்தை ஊக்குவிப்பதுடன், வளங்களை மீண்டும் பயன்படுத்தும் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையிலான பல்வேறு கூட்டுமுயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அத்துடன், பொறுப்பான வர்த்தக நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் அபர்டீன் ஹோல்டிங்ஸ் கொண்டுள்ள பரந்துபட்ட அர்ப்பணிப்பையும் இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது. குழுமத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், பல்வேறு தரப்பினருடனான கூட்டாண்மை, சமூகப் பங்கேற்பு மற்றும் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய நிலையான திட்டங்கள் ஊடாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றன.
இந்த PET போத்தல் சேகரிப்பு நடவடிக்கையின் வெற்றிக்கு, அரச நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வலர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் களத்தில் பணியாற்றிய குழுக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒரே சுற்றுச்சூழல் நோக்கத்துடன் இணைந்து வழங்கிய பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.
பேராதனைப் பல்கலைக்கழகம், SLIIT, AIBT, BCAS, ESOFT Uni, APIIT, SLIATE மற்றும் ANC ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர் தன்னார்வலர்களின் ஆதரவும் இந்த முயற்சிக்கு வலுசேர்த்தது .தூய்மையான சமூகங்களை உருவாக்குவதற்கும், வளங்களை மீண்டும் பயன்படுத்தும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
இலங்கையின்மீள் சுழற்சி மற்றும் வள மீட்புத் துறையில் தனது பங்களிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் Neptune Recyclers, இவ்வாறான திட்டங்களின் மூலம் தூய்மையான சமூகங்களை உருவாக்குவதற்கும், வளங்களை மீண்டும் பயன்படுத்தும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. அபர்டீன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், வர்த்தக நோக்கங்களுக்கு அப்பால் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும் வகையில், நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதும் அளவிடக்கூடியதுமான நிலைத்தன்மை முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான பரந்துபட்ட அர்ப்பணிப்பை இத்திட்டம் எடுத்துக்காட்டுகிறது. குழுமம் இயங்கி வரும் சமூகங்களுக்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கும் வகையிலான இத்தகைய முயற்சிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

































