Oct 29, 2026 - 06:18 PM

சாய் பல்லவிக்கு 34 வயதாகிறது. அவருக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கிறது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
தங்கச்சி பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது. அப்படி இருக்கும்போது அக்கா இப்படி சிங்கிளா இருக்கிறாரே என வருத்தப்படுகிறார்கள். இந்நிலையில்தான் நடித்திருக்கும் ராமாயணா படத்தை விளம்பரம் செய்ய நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரன்பிர் கபூருடன் கலந்து கொண்டார் சாய் பல்லவி.
அப்பொழுது சாய் பல்லவியிடம் சில கேள்விகள் கேட்டார் அமிதாப் பச்சன். அதில் திருமணம் பற்றிய கேள்வியும் அடக்கம். எப்படிப்பட்டவரை உங்களின் வாழ்க்கை துணையாக தேர்வு செய்வீர்கள் என கேட்டார் அமிதாப் பச்சன். அதற்கு சாய் பல்லவியோ, அவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். செல்ஃப் சென்டர்டாக இருக்கக் கூடாது. நம் வாழ்க்கையில் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தவராக இருக்க வேண்டும்.
தெளிவு இருக்க வேண்டும். தவறு செய்யலாம் ஆனால் அவர் செய்ததால் தான் நான் செய்தேன் என்று பேசக் கூடாது. பெரிய பட்டியலிடுகிறேன். ஆனால் நல்லவராக இருக்கணும். சமைக்கத் தெரிந்திருந்தால் நல்லது என்றார்.
சமையல் விஷயத்தை கேட்டதும் அரங்கில் இருந்த பெண்கள் எல்லாம் பயங்கரமாக கைதட்டி சிரித்தார்கள். வருங்கால மனைவிக்கு சமைக்கத் தெரிய வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே போன்று தன் வாழ்க்கைத் துணையாக வரும் ஆணுக்கு சமையல் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் சாய் பல்லவிக்கும் அதே எதிர்பார்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.
































