Oct 29, 2026 - 05:26 PM

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவல நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவலவிடம் இன்று (29) பிற்பகல் கையளிக்கப்பட்டது.
இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்துக்கு முன்னர் பேராசிரியர் எச்.எம்.ஜே.சி. பிட்டவல ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பீடத்தின் பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
































