Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ADB அவதானம்

Oct 5, 2026 - 03:16 PM

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்  ADB அவதானம்
Mobitel Inner 1278

இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 2026 ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நடத்தப்படும் திட்ட மீளாய்வுக் கூட்டம் தொடர்பிலான பூர்வாங்கக் கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால திட்ட வரைவுக்குள் உள்வாங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்காண்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உரிமையைத் உறுதிப்படுத்தல், அரச நடைமுறைகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நடைமுறைகளுக்கும் இடையில் தெளிவான மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பைப் பேணுதல், அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சலுகை அடிப்படையிலான நிதியியல் வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இலங்கையின் அபிவிருத்தி வேகத்தை மேலும் துரிதப்படுத்தி, அரச நிதி இலக்குகளை விரைவாக அடைந்துகொள்வதில் எழும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முறைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278