Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
2026 ஸ்ரீலங்கா AI வாரத்தில் 18 நடைமுறை AI செயலிகளை அறிமுகப்படுத்தியது Huawei

Oct 5, 2026 - 10:41 AM

2026 ஸ்ரீலங்கா AI வாரத்தில் 18 நடைமுறை AI செயலிகளை அறிமுகப்படுத்தியது Huawei
Mobitel Inner 1278

இலங்கையில் அண்மையில் நிறைவடைந்த 2026 2026 Sri Lanka AI Week நிகழ்வில், அன்றாட மனித அனுபவங்கள், வாடிக்கையாளர் சேவை, வணிக நடவடிக்கைகள், தொழில்துறைகள், அரச நிர்வாக செயல்பாடுகள், தேசிய உட்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை ஆகியவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய அதிநவீன AI செயலிகளின் தொடரை காட்சிப்படுத்த Huawei நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. 

நாட்டின் உத்தியோகபூர்வ AI தொழில்நுட்ப பங்காளியான Huawei நிறுவனம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேசிய யுஐ கண்காட்சிக்குக்குப் பிறகு, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த சிறப்புமிக்க தேசிய தொழில்நுட்ப நிகழ்வில் இணைந்து, அன்றாட நடைமுறைச் சூழல்கள் மற்றும் வணிக செயல்பாடுகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய 18 அதிநவீன நடைமுறை AI செயலிகளை காட்சிப்படுத்த முடிந்தது. 

அன்றாட வாழ்க்கையின் மனித அனுபவங்களை தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் எளிமையாக்குவதற்காக, Huawei நிறுவனம் உலகப் புகழ்பெற்ற iFLYTEK நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய AI Digital Human இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பல மொழிகளில் 24 மணி நேரமும் தானியங்கி வாடிக்கையாளர் சேவையை வழங்க முடிவது இதன் சிறப்பு அம்சமாகும். மேலும், நிறுவனங்களின் வரவேற்பறைப் பகுதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் பல்வேறு மொழிகளில் பேசும் நபர்களுக்கிடையே நேரடித் உடனடி மொழிபெயர்ப்பை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தக்கூடிய Multilingual AI Screen செயலியும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் AI Music Video மற்றும் Huawei Cloud AI Mirror தொழில்நுட்பங்கள் மூலம் தங்களுக்குத்தானே உரித்தான செயற்கை நுண்ணறிவு காட்சிப் படைப்புகளை உடனடியாக உருவாக்கிக்கொள்ளும் முறையைக் காட்சிப்படுத்திய Huawei ர்ரயறநi நிறுவனம் Huawei Device Ecosystem இன் கீழ் இயங்கும் AI Smart Home மற்றும் AI to Vehicle தொழில்நுட்பங்கள் மூலம், வீட்டில் உள்ள ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் சாதாரண மோட்டார் வாகனங்களைக் கூட அதிநவீன அறிவார்ந்த டிஜிட்டல் இடங்களாக மாற்றும் முறையை நேரடி அனுபவமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. 

இதற்கு மேலாக, வணிகத் துறையை பலப்படுத்துவதற்காக, உண்மையான நபர்கள் அல்லது செயற்கை டிஜிட்டல் படங்களைப் பயன்படுத்தி நேரடி வணிக வர்த்தகத்தை தானியங்கி முறையில் மேற்கொள்ளும் AI Livestreaming தொழில்நுட்பத்தை Huawei நிறுவனம் இங்கு காட்சிப்படுத்தியது. Huawei ModelArts மற்றும் AGIOne அமைப்புகளின் மூலம் இயங்கும் AI Token Metering & Billing தொழில்நுட்பமானது, AI பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணப் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் AI இற்காகச் செலவாகும் செலவை மிகவும் துல்லியமாக நிர்வகிக்கும் முறையைச் சுட்டிக்காட்டுகிறது. நிதி நிறுவனங்களுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட Agentic AI in Finance தொழில்நுட்பத்தின் மூலம், நிதித் துறையின் சிக்கலான செயல்பாடுகளைத் தானியங்கியாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ளும் முறை இங்கு காண்பிக்கப்பட்டது. 

அரசு மற்றும் பெரிய அளவிலான தொழில்துறைகளை முழுமையான டிஜிட்டல் மயமாக்கலுக்கு உட்படுத்துவதற்காக, பொது மக்கள் சேவைகள், நகர நிர்வாகம், சுகாதாரத் துறை, விவசாயம் மற்றும் வானிலை இயல் ஆகியவற்றைத் தானியங்கி மயமாக்கும் அதிநவீன AI in Government தொழில்நுட்பத் தீர்வுகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. தொழில்துறைகளுக்குத் தேவையான AI உட்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், நாட்டின் தொழில்நுட்ப மனிதவளத்தைப் பயிற்றுவித்தல் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான திட்டமும் AI in Government மூலம் முன்வைக்கப்பட்டது. அதேபோன்று, அதிவேக 5G தொழில்நுட்பத்தை தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தும் 5GtoB மூலம் ஸ்மார்ட் உற்பத்தி தொழிற்சாலைகள், மேம்பட்ட விநியோகச் சங்கிலிகள், போக்குவரத்து, சுகாதாரப் பாதுகாப்பு, ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் தானியங்கி ஸ்மார்ட் துறைமுக செயல்பாடுகளை நேரடியாக இயக்கும் முறையைக் காண்பித்த Huawei, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் தரவு மையங்களைக் கண்காணித்தல், ஆற்றல் சேமிப்பு மற்றும் அமைப்புகளின் முறிவுகளை முன்கூட்டியே கண்டறிந்து தானாகவே பராமரிக்கும் பயனுள்ள தொழில்நுட்பங்களையும் இதில் உள்ளடக்கியிருந்தது. 

கல்வித் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் பலப்படுத்துவதற்காக, பெரிய அளவிலான மொழி மாதிரிகள் (Large Language Models), AI agents மற்றும் cloud தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி AI chatbot ஐ உருவாக்கும் முறையை நடைமுறையில் கற்றுத்தரும் AI in Education என்பதும் இங்கு சமர்ப்பிக்கப்பட்டது. Beijing Normal University இணைந்து உருவாக்கிய MindGraph மூலம் காட்சி ஊடகங்களின் உதவியுடன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை காண்பிக்கப்பட்டதோடு, சிங்களம் மற்றும் தமிழ் மொழிக் கற்றலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. 

மேலும், கல்வி அமைச்சின் தொலைநிலைக் கற்றல் தொழில்நுட்பத் தீர்வுகளினூடாக The Smart Classroom அமைப்பின் மூலம் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையை பிற வகுப்பறைகள் மற்றும் கண்காட்சிக் கூடங்களுடன் நேரடியாக இணைத்து நேரடித் தொலைநிலைக் கற்பித்தலைச் செய்யும் முறையை Huawei வெற்றிகரமாக சித்தரித்துக் காட்டியது. 

27 ஆண்டுகளாக இலங்கையின் டிஜிட்டல் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முன்னணிப் பங்காளியாக இருக்கும் Huawei, In Sri Lanka, for Sri Lanka என்ற கொள்கைக்கு ஏற்ப செயற்பட்டு, நாட்டின் AI யுகத்திற்குத் தேவையான அடிப்படைத் தொழில்நுட்ப அடித்தளம், சூழலமைப்பு மற்றும் உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்காக உள்நாட்டுப் பங்காளர்களுடன் தொடர்ச்சியாக நெருக்கமாகப் பணியாற்ற இலக்கு வைத்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

Mobitel 1278