Oct 3, 2026 - 10:40 PM

வெளிநாட்டில் இருந்தவாறு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான 'எல்டோ தர்மே' என்பவரின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரிடமிருந்தும் 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (03) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.































