Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
இலங்கையின் முதன்மை NEV வர்த்தக நாமமான BYD இன் 11ஆவது காட்சியறை நீர்கொழும்பில் திறப்பு

Oct 1, 2026 - 12:30 PM

இலங்கையின் முதன்மை NEV வர்த்தக நாமமான BYD இன் 11ஆவது காட்சியறை நீர்கொழும்பில் திறப்பு
Mobitel Inner 1278

இலங்கையின் புதிய சக்தி வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாகவும், உலகின் முன்னணி புதிய சக்தி வாகன உற்பத்தியாளராகவும் திகழும் BYD, இலங்கையிலுள்ள தனது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனத்துடன் இணைந்து, தனது 11ஆவது காட்சியறையை மேல் மாகாணத்தில் திறந்து வைத்துள்ளது. 

கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி நீர்கொழும்பு, சிலாபம் வீதி, இலக்கம் 254 எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய காட்சியறை, கொழும்பு, காலி, குருநாகல், கண்டி, அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் உள்ள BYD இன் வளர்ந்து வரும் விற்பனை மற்றும் சேவை வலையமைப்போடு இணைந்துள்ளது. இப்புதிய காட்சியறையானது மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் BYD இன் இருப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, நீர்கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்சார மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வாகனங்களை எளிதில் கொண்டு சேர்க்கவும், நாடளாவிய ரீதியில் அதன் சேவையை விரிவாக்கவும் வழிவகுக்கிறது. 

BYD இன் ஏனைய விற்பனை வலையமைப்பில் வழங்கப்படும் நம்பகமான சேவை, ஆதரவு மற்றும் வாகனங்களுக்கான அணுகல் ஆகியவற்றை நீர்கொழும்பு வாடிக்கையாளர்களும் இதன் மூலம் பெற முடியும். இப்புதிய கிளை முதற்கட்டமாக காட்சியறையாக இயங்கும் அதேவேளையில், விற்பனை, பராமரிப்பு சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் ஆகிய அனைத்து சேவையையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் முழுமையான 3S நிலையமாக இதனை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு BYD SEALION 5, BYD SEALION 6, BYD SEALION 8, BYD ATTO 1, BYD ATTO 2, SHARK 6 மற்றும் BYD DOLPHIN உள்ளிட்ட பல முன்னணி BYD வாகன மாதிரிகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

இது குறித்து JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் BYD தனது 11ஆவது காட்சியறையை திறந்திருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகும். மிகக் குறுகிய காலத்தில், புதிய சக்தி வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இருந்து, அவை இலங்கை வாடிக்கையாளர்களிடையே நன்கு பரிச்சயமான தேர்வாக மாறுவது வரை சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை நாங்கள் கண்டுள்ளோம். நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் புதிய சக்தி வாகனப் பயன்பாட்டிற்கு நம்பிக்கையுடன் மாறுவதற்கு ஏதுவாக, விற்பனை வலையமைப்பையும் அதற்குத் தேவையான ஆதரவு உட்கட்டமைப்புகளையும் தொடர்ந்து கட்டியெழுப்புவதிலேயே எமது தற்போதைய கவனம் அமைந்துள்ளது.” எனக் குறிப்பிட்டார். 

வலுவான புதிய சக்தி வாகன சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, Keells நிறுவனம் நாடளாவிய ரீதியில் 43 சார்ஜிங் நிலையங்களை ஸ்தாபித்துள்ளது. மேலும், GreenEV நிறுவனத்துடனான BYD இன் சமீபத்திய மூலோபாயக் கூட்டாண்மை மூலம் கூடுதலாக 73 சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள மொத்த பொது சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, ஒவ்வொரு BYD மற்றும் Denza வாடிக்கையாளருக்கும் ஒரு 'ஹோம் சார்ஜர்' (Home Charger) வழமையாக வழங்கப்படுவதால், அவர்கள் தங்கள் வாகனங்களை எந்தவித சிரமமுமின்றி இலகுவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். 

நீர்கொழும்பில் தனது 11ஆவது காட்சியறையை திறந்துள்ளதன் மூலம், BYD இலங்கையில் தனது சில்லறை விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. தற்போது மேல், தென், மத்திய, வடமேல், கிழக்கு மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களில் பரந்து விரிந்துள்ள BYD இன் காட்சியறைகள் மற்றும் சேவை நிலையங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான வாகனங்களையும், சேவைகளையும் மிக அருகிலேயே தடையின்றி வழங்கி வருகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

Mobitel 1278