Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
விமானி மீது உதவி விமானி தாக்குதல்: "பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி" என்கிறது இஸ்ரேல்!

Sep 30, 2026 - 06:44 PM

விமானி மீது உதவி விமானி தாக்குதல்:  "பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி" என்கிறது இஸ்ரேல்!
Mobitel Inner 1278

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய் (flydubai - FZ1073) விமானத்தின் உதவி விமானி, முதன்மை விமானியை கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த விமானம் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" முயற்சியாக இருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

ஓமான் நாட்டைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்ட குறித்த உதவி விமானி, தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, விமானத்தின் பணிக்குழாம் உறுப்பினர்கள் (cabin crew) விமானிகளின் அறைக்குள் (cockpit) நுழைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

ஜோர்தான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் திடீரென 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் வேகமாக கீழே இறங்கியதைத் தொடர்ந்து அவசர சமிக்ஞைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ தூதரக உறவுகள் இல்லாத சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் (Tabuk) விமான நிலையத்தை நோக்கி விமானம் திருப்பி விடப்பட்டுப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. 

காயமடைந்த இரண்டு விமானிகளும் தபூக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் விமானிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் எனக் கூறப்பட்ட போதிலும், இது விமானிகளின் மனநலம் சார்ந்த பிரச்சினை அல்ல என்றும், பயங்கரவாதத் தாக்குதல் முயற்சியே என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகப் பேச்சாளர் டோரன் ஸ்பீல்மேன் கூறுகையில், இது ஒரு விமானக் கடத்தல் சம்பவம் அல்ல எனத் தெளிவுபடுத்தியுள்ளார். 

சுமார் 150 இஸ்ரேலிய பயணிகள் பயணித்த இந்த விமானத்தில் கூரிய ஆயுதத்துடன் ஒருவர் விமானியைக் கீழே தள்ளியதைக் கண்டதாகவும், இரத்தக் கறைகள் படிந்திருந்ததாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவத்தையடுத்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசரப் பாதுகாப்பு ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். 

அதேவேளை, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஃப்ளைதுபாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

Mobitel 1278