Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
போதை அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளை காக்க சட்டத்தை விடக் குடும்ப உறவே சிறந்தது - ஜனாதிபதி!

Sep 30, 2026 - 06:07 PM

 போதை அச்சுறுத்தலிலிருந்து பிள்ளைகளை காக்க சட்டத்தை விடக் குடும்ப உறவே சிறந்தது - ஜனாதிபதி!
Mobitel Inner 1278

சட்டத்தை விடவும் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான பலமான உறவு மூலமே போதைப்பொருள் பேரழிவில் இருந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) கூடியபோதே இதனை தெரிவித்த ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பல பணிப்புரைகளையும் வழங்கினார். 

அதன்படி, பிள்ளைகளின் நடத்தைகளைக் கண்காணிப்பது குறித்துப் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் பொறிறையொன்றை உருவாக்குமாறும், பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் ஆபத்து காணப்பட்டால் அது குறித்து அறிவிக்க நம்பகமான ஆசிரியர்கள் அல்லது மதத் தலைவர்களைப் பயன்படுத்துவதற்கான விசேட பயிற்சிகளை வழங்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

அதேநேரம், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வசதிகள் விரிவாக்கப்பட்டதன் மூலம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8,000 பகுப்பாய்வு நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டு, சிறைச்சாலை நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் வாரத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறும், பொலிஸ், நீதித்துறை மற்றும் சிறைச்சாலை அமைப்புகளை இணைக்கும் மத்திய டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

அத்துடன் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்காக வௌிநாட்டு பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

போதைப்பொருள் பாவனையின் மோசமான விளைவுகள் குறித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக இளைஞர்களை இலக்காகக் கொண்ட திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மேலும், போருக்குப் பின்னரான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவி வரும் போதைப்பொருளை பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான சவால் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

அதேநேரம், போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் மற்றும் அது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் மக்களிடையே நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அந்த இலக்கத்துக்கு கிடைத்த தகவல்களுக்கு அளிக்கப்பட்ட பதிலளிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். 

மேலும், புனர்வாழ்வு நிலையங்களின் கொள்ளளவை அதிகரிப்பது உட்பட புனர்வாழ்வு செயன்முறையின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

Mobitel 1278