Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
First Capital, CFA Society Sri Lanka Capital Market Awards 2026 விருது வழங்கும் நிகழ்வில் மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது

Sep 29, 2026 - 11:07 AM

First Capital, CFA Society Sri Lanka Capital Market Awards 2026 விருது வழங்கும் நிகழ்வில் மூன்று விருதுகளை சுவீகரித்துள்ளது
Mobitel Inner 1278

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் இலங்கையின் முதலீட்டு வங்கிச் சந்தையில் முன்னணி நிறுவனமுமான First Capital Holdings PLC, 13ஆவது முறையாக நடைபெற்ற CFA Society Sri Lanka Capital Market Awards 2026 விருது வழங்கும் நிகழ்வில் மூன்று விருதுகளை வென்றுள்ளது. இவ் விருதுகள், பங்குப் பகுப்பாய்வு மற்றும் அலகு நம்பிக்கை நிதி (unit trust fund) முகாமைத்துவம் ஆகிய துறைகளில் நிறுவனம் ஆற்றிவரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. 

இவ் விருதுகளில், First Capital Research நிறுவனத்துக்கான Best Stockbroking Research Teamஇற்கு வழங்கப்பட்ட கூட்டு வெள்ளி விருது, அப்பிரிவில் வழங்கப்பட்ட உயரிய விருதாக அமைந்தது. மேலும், சலாமா சனூன் தயாரித்த சுற்றுலாத்துறை தொடர்பான ஆய்வறிக்கைக்காக Best Sector Research Report இற்காக First Capital Research வெண்கல விருதையும், First Capital Money Market Fund, Best Unit Trust Fundஇற்காக வெண்கல விருதையும் பெற்றன. 

கொழும்பு Cinnamon Grand ஹோட்டலின் Oak Roomஇல் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இவ் விருதுகள் வழங்கப்பட்டன. பங்குப் பகுப்பாய்வு, முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் அலகு நம்பிக்கை நிதி முகாமைத்துவம் உள்ளிட்ட இலங்கையின் மூலதனச் சந்தையின் முக்கிய துறைகளில் விசேடத்துவத்தை CFA Society Sri Lanka Capital Market விருதுகள் அங்கீகரிக்கின்றன. 

இந்த அங்கீகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த First Capital Asset Management Limited நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், சுயாதீனமற்ற நிறைவேற்றுப் பணிப்பாளருமான கவின் கருணாமூர்த்தி, “இந்த விருதுகள் எமது ஆய்வு மற்றும் நிதி முகாமைத்துவக் குழுக்களின் பணியின் தரத்தையும் நிபுணத்துவத்தையும் பிரதிபலிக்கின்றன. தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கும் வகையில் அர்த்தமுள்ள சந்தைத் தகவல்களையும் முதலீட்டுத் தீர்வுகளையும் வழங்குவதில் நாம் கொண்டுள்ள கவனத்தை இந்த அங்கீகாரம் மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார். 

First Capital Holdings PLC நிறுவனத்தின் பிரதம ஆய்வு மற்றும் மூலோபாய அதிகாரி டிமந்த மத்யூ மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மாறிவரும் சந்தைச் சூழலில் பொருத்தமானதும், சுயாதீனமானதும், ஆழ்ந்த நுண்ணறிவுமிக்க பகுப்பாய்வுகளைத் தொடர்ந்து வழங்குவதில் எமது ஆய்வுக் குழு கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது. உயர் தொழில்சார் தரங்களை பேணும் அதே வேளை இலங்கையின் மூலதனச் சந்தையின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.” என்றார். இந்த அங்கீகாரம், உயர்தர ஆய்வுகளையும் முதலீட்டுத் தீர்வுகளையும் வழங்குவதுடன், இலங்கையின் மூலதனச் சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பதற்கான First Capital நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. 

First Capital Holdings PLC பற்றி 

இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், முதன்மை அரசுப் பத்திர வர்த்தகர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துத்தை கொண்டுள்ள First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகள், லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் (LRA) நிலையான கண்ணோட்டத்துடன் கூடிய ‘A+’ என்னும் நிறுவன மதிப்பீடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. First Capital Holdings PLC, உலகப் பொருளாதார இதழ் விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டமை முதலீட்டு வங்கித் துறையில் ஒரு நம்பகமான தலைவராக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. 2025 இல் இலங்கையில் Superbrands தகுதியை அடைந்த முதல் முதலீட்டு நிறுவனமாக விளங்கி தனது வலுவான வர்த்தகநாம இருப்பையும் சந்தைத் தலைமைத்துவத்தையும் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278