Sep 29, 2026 - 01:14 PM

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அமர்வு இன்று (29) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கீரிமலைப் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகள் இதுவரை அகற்றப்படாததற்குக் எதிர்ப்பு தெரிவித்து, நான்கு கட்சிகளைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் சபை அமர்வைப் புறக்கணித்து வெளியேறினர்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் 5 உறுப்பினர்கள், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய கட்சிகளின் தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 10 உறுப்பினர்களே இவ்வாறு சபை அமர்வைப் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.































