Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டத்தை முன்னெடுத்தது

Sep 29, 2026 - 10:49 AM

ஜனசக்தி லைஃப், யாழ்ப்பாணத்தில் சமூக ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழா காலத்தில் 10 நாள் சமூக அணுகல் திட்டத்தை முன்னெடுத்தது
Mobitel Inner 1278

காப்புறுதித் துறையின் முன்னணி வர்த்தகநாமமும் JXG இன் (ஜனசக்தி குழுமம்) முதன்மை வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், நல்லூர் திருவிழாக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தனது சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. பத்து நாட்கள் முன்னெடுக்கப்பட்ட இத் திட்டத்தின் ஊடாக அப் பிரதேசத்தில் உள்ள 7,000க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திய ஜனசக்தி லைஃப், ஆயுள் பாதுகாப்பு மற்றும் நிதிப்பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பான பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 

இத் திட்டத்தின் முதல் ஐந்து நாட்களில் ஜனசக்தி லைஃப் குழுவினர், சுன்னாகம், சங்கானை, நாவற்குழி, கொக்குவில் மற்றும் குருநகர் ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று சமூக அணுகல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஜனசக்தி லைஃப் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து, ஆயுள் பாதுகாப்பு தொடர்பில் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் அங்குள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் தேவைகளையும் புரிந்துகொண்டனர். 

அடுத்த ஐந்து நாட்களில், நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் ஜனசக்தி லைஃப் சிறப்பு செயற்பாட்டு காட்சிக்கூடத்தை அமைத்திருந்தது. நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த பெருமளவான பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில் இக் கூடம் அமைந்திருந்தது. இதன் வாயிலாக ஜனசக்தி லைஃப் பிரதிநிதிகள், தனிநபர்களினதும் குடும்பங்களினதும் தேவைகளுக்கு ஏற்றவாறான ஆயுள் காப்புறுதி மற்றும் பாதுகாப்புத் தீர்வுகள் தொடர்பில் அவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டல்களை வழங்கினர். 

ஜனசக்தி லைஃப்பின் 32ஆவது ஆண்டு நிறைவு மற்றும் காப்புறுதி மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுள் பாதுகாப்பு தொடர்பான செய்தியை யாழ்ப்பாண மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. வட மாகாணத்தின் முக்கிய கலாச்சாரக் கொண்டாட்டங்களில் ஒன்றான நல்லூர் திருவிழாவை மையப்படுத்தி இந் நடவடிக்கைகள் இடம்பெற்றன. வடக்கைச் சேர்ந்த மக்களின் சமூக வாழ்வில் நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தலைமுறைகள் கடந்து கொண்டாடப்பட்டு வரும் நல்லூர் திருவிழா, உள்ளூர், பிராந்திய மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான வடபகுதி மக்களை ஒன்றிணைத்து, நல்லூர் திருவிழாவின் பாரம்பரியம் தொடர்ந்து பேணப்படுவதற்கு வழிவகுக்கிறது. யாழ்ப்பாண மக்களின் வாழ்வில் இக் கோயில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்த ஜனசக்தி லைஃப், சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்தவும், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வில் ஆயுள் பாதுகாப்பை மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லவும் இத் திருவிழாவை அர்த்தமுள்ள ஒரு வாய்ப்பாகக் கருதியது. 

இந்த முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, “ஜனசக்தி லைஃப்பை பொறுத்தவரையில் எமது கடமை காப்புறுதியை வழங்குவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. நாம் சேவையாற்றும் சமூகங்களுடன் இணைந்திருப்பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை இணைந்து கொண்டாடும் அதேவேளை அவர்களது வாழ்வில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதும் எமது கடமையாகும். நாடெங்கிலுமுள்ள சமூகங்களை சென்றடைவதற்கும், மேலும் அதிகமான தனிநபர்களும் குடும்பங்களும் பாதுகாப்பான எதிர்காலத்தை திட்டமிட உதவுவதற்குமான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது போன்ற முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.” என்றார். 

ஜனசக்தி லைஃப்பின் இந்த 10 நாள் முயற்சி, சமூகங்களுடன் தொடர்ந்து இணைந்து செயற்படுவதற்கான அதன் அர்ப்பணிப்பையும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” என்ற அதன் பரந்த நோக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. மக்கள் வாழும், பணியாற்றும் மற்றும் ஒன்றுகூடும் சமூகங்களுக்கு ஆயுள் பாதுகாப்பை நேரடியாகக் கொண்டு செல்வதன் மூலம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் அவர்களது எதிர்கால இலக்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனசக்தி லைஃப் தொடர்ந்தும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278