Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
ஜனசக்தி லைஃப், வாழ்வைப் பாதுகாத்து, நம்பிக்கையைக் கட்டியெழுப்பிய 32 ஆண்டுகளை நிறைவு செய்தது

Sep 29, 2026 - 10:46 AM

 ஜனசக்தி லைஃப், வாழ்வைப் பாதுகாத்து, நம்பிக்கையைக் கட்டியெழுப்பிய 32 ஆண்டுகளை நிறைவு செய்தது
Mobitel Inner 1278

காப்புறுதித் துறையின் முன்னணி வர்த்தகநாமமும் JXGஇன் (ஜனசக்தி குழுமம்) முதன்மை வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், தனது 32ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்நிறைவு, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பல தலைமுறை இலங்கையர்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் நீண்டகால நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கட்டியெழுப்பியுள்ளமையை எடுத்துக்காட்டுகிறது. நிறுவனத்தின் ஸ்தாபகரும் கௌரவத் தலைவருமான C. T. A. Schaffter அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த ஆண்டு நிறைவு நிகழ்வு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பாரம்பரியத்தையும் கௌரவித்தது. 

1994ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது விசேட ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஜனசக்தி லைஃப் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதன் பின்னர், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து தன்னை மேம்படுத்தி வந்துள்ளதுடன், புத்தாக்கமான பாதுகாப்புத் தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதன் மூலம் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. விசேட பாதுகாப்புத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜனசக்தி லைஃப், COVID Cover, AIDS Cover மற்றும் Military Cover போன்ற காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. மேலும், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் ஆயுள் காப்புறுதியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் 80 வயது வரை பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். 

தற்போது, ஜனசக்தி லைஃப் ரூ.41.1 பில்லியன் பெறுமதியைத் தாண்டிய சொத்துக்களை கொண்டுள்ளதுடன் Lanka Rating Agency நிறுவனத்திடமிருந்து A- தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. அதன் ரூ.16.7 பில்லியன் பெறுமதியான பங்கு மூலதன அடிப்படை, காப்புறுதி வாடிக்கையாளர்களின் நீண்டகால பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான நிறுவனத்தின் ஆற்றலுக்கு மேலும் வலுசேர்க்கிறது. 

ஜனசக்தி லைஃப் வர்த்தகநாமத்தின் வலிமை, 2026ஆம் ஆண்டில் கிடைத்த பல்வேறு விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. Sri Lanka’s 50 Best Workplaces™, பெண்கள் நட்புறவான சிறந்த 20 பணியிடங்கள் மற்றும் இளம் திறமையாளர்களுக்கான இலங்கையின் 20 சிறந்த பணியிடங்கள் ஆகிய பட்டியல்களிலும் ஜனசக்தி லைஃப் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் முதல் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும், Brand Financeஇன் Sri Lanka 100 Most Valuable Brands பட்டியலிலும் ஜனசக்தி லைஃப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, உயிர்களைப் பாதுகாப்பது, வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்குப் பதிலளிப்பது மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உறவுகளை உருவாக்குவது ஆகியவற்றில் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் ஜனசக்தி லைஃப் தனது நற்பெயரை கட்டியெழுப்பியுள்ளது. ஜனசக்தி லைஃப்பின் 32 ஆண்டுகால பயணம், தலைமுறை தலைமுறையாக இலங்கை குடும்பங்கள் இந்த வர்த்தகநாமத்தின் மீது கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. 

ஜனசக்தி லைஃப் பற்றி 

JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

Mobitel 1278