Sep 29, 2026 - 10:43 AM

ரெனோ (Renault) நிறுவனம் இலங்கை வாகனச் சந்தைக்கு மீண்டும் பிரவேசிக்கும் தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக, வாடிக்கையாளர்கள் அதன் பிராண்டை அறிந்துகொள்ளவும், அதன் புதிய வாகன மாடல்களை நேரடியாகப் பார்வையிட்டு அனுபவிக்கவும் வாய்ப்பளிக்கும் Renault Experience Centre ஐ கொழும்பு Majestic City இல் அண்மையில் திறந்துள்ளது.
அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிடெட் (AMW) நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் திரு. ஜவஹர் கணேஷ் மற்றும் AMW நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் இயக்குநர் திரு. பிரசன்ன டி சில்வா ஆகியோரால் இந்த மையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் AMW நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், வாடிக்கையாளர்கள், நலவிரும்பிகள் மற்றும் ஏனைய அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Majestic City நுழைவு மண்டபத்தில் (Lobby) அமைந்துள்ள இந்த மையத்தில், இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் Renault Kwid, Renault Kiger மற்றும் Renault Triber ஆகிய மூன்று மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களைப் பார்வையிடவும், அவற்றின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை அறிந்துகொள்ளவும் முடியும் என்பதுடன், அவ்விடத்திலேயே Test Drive மேற்கொள்ளும் வசதியையும் பெறலாம்.
வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் அதிகரிக்கும் வகையில், AMW நிறுவனம் போதுமான அளவு Renault வாகன இருப்புக்களை இலங்கையில் வைத்துள்ளதால், வாடிக்கையாளர்கள் தாம் தெரிவுசெய்த வாகனம் வருகை தரும் வரை பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு நடைமுறைகள் நிறைவடைந்ததும், ஒரு நாளிலேயே வாடிக்கையாளர்கள் தங்களது புதிய Renault வாகனத்தைப் பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடங்க முடியும். இது வாகனத்தை வாங்கும் அனுபவத்தை மிகவும் விரைவானதாகவும் வசதியானதாகவும் மாற்றுகிறது.
அத்துடன், 3 ஆண்டுகால உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன், பிரத்யேக Renault விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதிகள் மூலம் வாகன உரிமைக் காலம் முழுவதும் தொழில்முறை சேவையும் ஆதரவும் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் மன அமைதியைப் பெற முடியும்.
இந்த மையத்தின் திறப்பு விழா குறித்து கருத்து தெரிவித்த AMW நிறுவனத்தின் குழும நிர்வாக இயக்குநர் திரு. ஜவஹர் கணேஷ்:
ரெனோ பிராண்டை இலங்கைக்கு மீண்டும் வரவேற்பதிலும், Majestic City இல் Renault Experience Centre ஐத் திறப்பதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். Renault என்பது தனித்துவமான பாரம்பரியம், உலகளவில் வலுவான இருப்பு, புதுமை மற்றும் தனித்துவமான வாகன வடிவமைப்பிற்குப் பெயர் பெற்ற ஒரு சர்வதேச பிராண்டாகும். AMW ஊடாக அந்தப் பாரம்பரியத்தையும் அனுபவத்தையும் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மிக அருகில் கொண்டு வருகிறோம்.
இந்த மையம் வாடிக்கையாளர்களுக்கு Renault வாகன மாடல்களை நேரடியாக அறிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும், எம்மிடம் போதுமான வாகன இருப்புக்கள் உள்ளதால், நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய தேவையின்றி வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். 3 ஆண்டுகால உற்பத்தியாளர் உத்தரவாதம் மற்றும் பிரத்யேக விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதிகள் வாயிலாக, வாகன உரிமைக் காலம் முழுவதும் வலுவான ஆதரவை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையையும் மன அமைதியையும் ஏற்படுத்துகிறோம். இலங்கை வாகன ஓட்டிகளின் வலுவான மற்றும் நம்பகமான தெரிவாக Renault பிராண்டை நிலைநிறுத்துவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
இந்த மையம் வாரத்தின் 7 நாட்களும், காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் தமக்கு வசதியான நேரத்தில் வருகை தர முடியும்.
1898 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கப்பட்ட Renault நிறுவனம், 125 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார் வாகனப் பாரம்பரியம், புதுமை மற்றும் பொறியியல் நிபுணத்துவத்துடன் சர்வதேச வாகனத் துறையில் பங்களித்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் வலுவான இருப்பை நிலைநிறுத்தியுள்ள இந்த பிராண்ட், பிரான்சின் முன்னணி மோட்டார் வாகன பிராண்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் mobility துறையில் முன்னணி நிறுவனமான AMW, அத்துறைக்குள் 70 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டு இலங்கையில் Renault நிறுவனத்தின் மீள் வருகையை முன்னெடுத்து வருகிறது. AMW நிறுவனத்தின் மோட்டார் வாகனத் துறையில் கொண்டுள்ள திறன்கள், வாடிக்கையாளர் பிணையம் மற்றும் உள்ளூர் சந்தை பற்றிய ஆழமான புரிதல் ஆகியவை இலங்கையில் Renault பிராண்டை மீண்டும் வலுவாக நிலைநிறுத்துவதற்கான அடித்தளத்தை வழங்குகின்றன.
Majestic City இல் அமைந்துள்ள இந்த மையத்தின் திறப்பானது, எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதும் Renault மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள விரிவான நடவடிக்கைகளின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
Renault Experience Centre – Majestic City
* இடம்: Majestic City, கொழும்பு
* திறந்திருக்கும் நாட்கள்: வாரத்தின் 7 நாட்களும்
* நேரம்: காலை 9:00 – இரவு 8:00
* வாகன மாடல்கள்: Renault Kwid | Renault Kiger | Renault Triber
* Test Drive: அவ்விடத்திலேயே மேற்கொள்ளலாம்
* உத்தரவாதம்: 3 ஆண்டுகால உற்பத்தியாளர் உத்தரவாதம்
* விற்பனைக்குப் பிந்தைய சேவை: பிரத்யேக Renault விற்பனைக்குப் பிந்தைய சேவை வசதிகள்
* வாகன இருப்பு: தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவு நடைமுறைகள் நிறைவடைந்ததும், உடனடியாக வாகனத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் போதுமான வாகன இருப்புக்கள் கைவசம் உள்ளன































