Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை!

Sep 27, 2026 - 11:05 PM

அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை!
Mobitel Inner 1278

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். 

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 303-வது இன்னிங்ஸில் 15,000 ஓட்டங்கள் என்ற இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். 

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 377-வது இன்னிங்ஸில் 15,000 ஓட்டங்களை எட்டியதே அதிவேக சாதனையாக இருந்தது. 

தற்போது சச்சினை விட 74 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக்கொண்டு, அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

போட்டியில் 14,941 ஓட்டங்களுடன் களம் புகுந்த கோலி, 15,000 ஓட்டங்களை எட்ட 59 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 

நிதானமாக விளையாடிய அவர், அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தை மிட்விகெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டி 46 பந்துகளில் 59 ஓட்டங்களை எட்டி இந்த மைல்கல்லை அடைந்தார். 

இச்சாதனையைப் பூர்த்தி செய்தவுடன், தனது முன்மாதிரியான சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரு கரங்களையும் உயர்த்தி, திருவனந்தபுரம் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களின் எழுச்சிமிக்க கரகோஷத்தை ஏற்றுக்கொண்டார். 

போட்டியின் இறுதியில் அபாரமாக ஆடிய கோலி 88 பந்துகளில் 139 ஓட்டங்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அணியின் தலைவர் சுப்மன் கில்லின் அதிரடி சதம் (110 ஓட்டங்கள்) மற்றும் கோலியின் 55-வது ஒருநாள் சதத்தின் தயவால், மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த 296 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா லாவகமாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 

18,426 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 15,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரராக விராட் கோலி திகழ்கிறார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278