Sep 27, 2026 - 11:53 PM

2030 ஆம் ஆண்டளவில் ஆண்டிற்கு 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 பில்லியன் டொலர் வருவாய் இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism என்ற தொனிப்பொருளில் இன்று (27) மேல் மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்ற 2026 உலக சுற்றுலா தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 2026 வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச டிஜிட்டல் விளம்பரப் பிரச்சாரங்களுக்காக 6 பில்லியன் ரூபாயும், சுற்றாடல் நட்பு மற்றும் கலாசார பாரம்பரியத் திட்டங்களுக்காக 3.5 பில்லியன் ரூபாயும், விமான நிலைய நவீனமயமாக்கலுக்கு 1,000 மில்லியனும், மனிதவள மேம்பாட்டிற்கு 500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
பாடசாலை மட்டத்திலான சுற்றுலாச் சங்கங்கள் (Tourism Clubs) மற்றும் வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாகச் சுற்றுலாத் துறையைப் புதிய தொழிற்துறைப் பாதையாகக் கற்பதற்கு மாணவர்களுக்குப் பிரதமர் இதன்போது அழைப்பு விடுத்தார்.































