Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு

Sep 26, 2026 - 06:06 PM

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு
Mobitel Inner 1278

இவ்வாண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 99,634 ஆகும், அதேவேளையில் மரண விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது. 

மேலும், மொத்த நோயாளர்களில் 52.53% மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 52,340 ஆகும். 

மாவட்ட மட்டத்தில் பார்க்கும்போது, அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 21,136 ஆகும். 

இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் 19,569 நோயாளர்களும், கண்டியில் 7,547 நோயாளர்களும், களுத்துறையில் 6,339 நோயாளர்களும் மற்றும் மாத்தறையில் 6,273 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

இதற்கிடையில், ஜூலை மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும். 

மேலும் ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 

செப்டம்பர் மாதத்தில் இதுவரை 4,144 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

37 மருத்துவ அதிகார பிரிவுகள் தொடர்ந்து டெங்கு அதிஅபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், நுளம்புகள் பெருக்கமடையும் இடங்களை அழித்து சுற்றாடலை தூய்மையாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

Mobitel 1278