Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் - பாதுகாப்பாக கொழும்புக்கு

Sep 25, 2026 - 09:42 AM

ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் - பாதுகாப்பாக கொழும்புக்கு
Mobitel Inner 1278

இலங்கை கடற்படையினரின் கூட்டு நடவடிக்கையில் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் நேற்று (24) கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இலங்கைக்கு தெற்கே செப்டம்பர் 22 ஆம் திகதி கவிழ்ந்த 'KM கருடா ஜெயா VI' என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இந்த பணியாளர்கள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்கு உட்பட்ட கடற்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அங்குதான் இவர்கள் முதலில் ஆபத்தில் இருப்பதாகப் தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், 'MV மூன்ஸ்டோன்' என்ற வர்த்தகக் கப்பல் கடலில் தவித்த 25 பேரையும் மீட்டு, கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் அளித்தது. 

அவசர கால அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, கொழும்பு MRCC ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கை கடற்படை 2 படகுகளை அனுப்பி, MV மூன்ஸ்டோன் கப்பலால் மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு அழைத்து வந்தது. 

அதன்படி, கடற்படையினரால் மீட்கப்பட்ட 25 பேரையும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்து, மனிதாபிமான உதவிகளை வழங்கியதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

ஹட்டன் - கொழும்பு வீதி இயல்பு நிலைக்கு திரும்பியது!

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்படுமா?

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

மழையால் மலையகம் ஸ்தம்பித்தது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

22 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் சந்தேகம் உள்ளது!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

மலையகத்தில் பலத்த காற்றுடன் கனமழை!

விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

Mobitel 1278