Sep 25, 2026 - 08:20 AM

சுட்டுக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காகத் தேடப்பட்டு வந்த 2 சந்தேக நபர்களை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இம்மாதம் 21 ஆம் திகதி அம்பலங்கொட, கஹாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ஒருவரைப் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மீட்டியாகொடா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் குழு ஒன்று, நேற்று (24) காலை பத்தபொல பொலிஸ் பிரிவில் இந்த சந்தேக நபர்களைக் கைது செய்தது.
இவர்கள் அலுத்வல மற்றும் மீட்டியாகொட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களுக்கு 19 மற்றும் 22 வயது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றச் செயலுக்காக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரே சந்தேக நபர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த 2 பாதுகாப்புத் தலைக்கவசங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.































