Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
இந்தியா
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 முக்கிய புள்ளிகள் கைது?

Sep 24, 2026 - 09:24 AM

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 முக்கிய புள்ளிகள் கைது?
Mobitel Inner 1278

தொழில் அதிபர் வீரமணியிடம் ரூ.70 கோடியை வாங்கிக் கொண்டு அவரை வழக்கில் சிக்க வைத்து முதுகில் குத்தியவர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 முக்கிய அரசியல் புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

'ஜெம் கிரானைட்' தொழில் அதிபர் வீர மணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வீரமணி 'போக்சோ' வழக்கில் சிக்கியது பற்றி நேற்று திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டது. அவரிடம் ரூ.70 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு அவரை ஏமாற்றியவர்கள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பொலிஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது. 

இந்த வழக்கில் வீரமணியோடு சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடைய வீட்டில் வைத்துதான் சிறுமிகளுடன் வீரமணி பாலியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் நடத்திய பாலியல் விளையாட்டுகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகி உள்ளது. 

அந்த வீடியோ காட்சிகளை சாந்தியும், அவரது கணவரும் வீரமணிக்கு தெரியாமல் டி.வி.யில் போட்டு பார்த்து ரசிப்பார்களாம். அந்த காட்சிகளை 2 'பென்டிரைவ்'களில் பதிவு செய்துள்ளனர். இதை வைத்து வீரமணியிடம் கோடிக்கணக்கில் பணம் கறக்க சாந்தியும், அவரது கணவரும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு 2 அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் வீரமணியிடம் பேரம் பேச திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர். இன்னொருவர் தனியாக அரசியல் கட்சி நடத்தும் தலைவர். 

குறிப்பிட்ட அந்த 2 அரசியல் பிரமுகர்களும் வீரமணியை தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளனர். மிரட்டலுக்கு பயந்த வீரமணி ரூ.10 கோடியை அவர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த ரூ.10 கோடியில் ரூ.8 கோடியை அரசியல் பிரமுகர்கள் இருவரும் பங்கு போட்டு கொண்டனர். சாந்திக்கும், அவரது கணவருக்கும் ரூ.2 கோடி மட்டும்தான் கிடைத்தது. பெரியளவில் பணம் கறக்க திட்டமிட்ட அவர்கள் இதில் ஏமாற்றமடைந்தனர். 

இதனால் ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கிய 2 'பென்டிரைவ்'களையும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ஒப்படைத்தனர். தங்களது பெயர் இதில் வரக்கூடாது என்றும் பொலிஸாரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விபசார தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரி வீரமணியிடம் பணத்தை கறக்க திட்டமிட்டுள்ளார். அவர், வீரமணியிடம் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், உங்களை கைது செய்ய போகிறோம் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்டு வீரமணி அதிர்ச்சி அடைந்தார். கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.60 கோடி பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். 

நிலைமை மோசமானதை உணர்ந்த வீரமணி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.80 கோடிக்கு விற்றுள்ளார். அந்த பணத்தில் ரூ.60 கோடியை குறிப்பிட்ட அந்த அதிகாரியிடம் கொடுத்ததாக வீரமணியின் டைரியில் தகவல் உள்ளது. அந்த ரூ.60 கோடியும் யார்-யாருக்கு பங்கீட்டு கொடுக்கப்பட்டது என்பது அந்த அதிகாரிக்குத்தான் தெரியும் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது தனிப்படை பொலிஸாரின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த பணம் கைமாறிய பின்னர்தான், இந்த வழக்கில் 'வீடியோ' ஆதாரம் சரியாக இல்லை என்றும், சம்பந்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் வழக்கை முடித்து கொள்வதாகவும் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

செய்த மனுவை நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை. தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் த்தரவிட்டது. அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நீதிமன்றின் இந்த உத்தரவு மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும், சமூகரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. ஒரு பக்கம் 'போக்சோ' வழக்கு தனியாக நடத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் ரூ.70 கோடி கைமாறியது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடக்கிறது. முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதால் இதிலும் கைது நடவடிக்கை பாயலாம். 

பணம் வாங்கியதற்கான ஆதாரங்களை பொலிஸார் திரட்டுகிறார்கள். ஆதாரங்கள் கிடைத்தால் காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 2 அரசியல் புள்ளிகள் மீதும், குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இதர இடைத்தரகர்கள் மீதும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

Mobitel 1278