Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
செலிங்கோ லைஃப், வாடிக்கையாளர் சேவைக்காக மேலதிக முயற்சி மேற் கொண்ட சாம்பியன்களைக் கொண்டாடியது

Sep 24, 2026 - 11:11 AM

செலிங்கோ லைஃப், வாடிக்கையாளர் சேவைக்காக மேலதிக முயற்சி மேற் கொண்ட சாம்பியன்களைக் கொண்டாடியது
Mobitel Inner 1278

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வாடிக்கையாளர் சேவையில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த தனது சிறந்த செயல்திறன் கொண்ட விற்பனை ஊழியர்களை அரையாண்டு விருதுகள் (Mid-Year Awards) 2026 நிகழ்வில் கௌரவித்துள்ளது. 

DoubleTree by Hilton Weerawila இல் நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட விற்பனை அதிகாரிகள் உள்ளிட்ட 230 பேர் கலந்துகொண்டனர். 

இரண்டு நாள் இடம்பெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வானது நிறுவனத்தின் விற்பனை செயற்பாடுகளில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியவர்களை அங்கீகரித்து வெகுமதி வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தங்களது இலக்குகளை அடைவதில் சிறந்து விளங்கியவர்களையும் ஒன்றிணைத்தது. 

124 விருது வெற்றியாளர்கள் தங்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்கள், நினைவுப் பலகைகள், பதக்கங்கள், வெற்றிக்கிண்ணங்கள், பணப் பரிசுகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு வெகுமதிகளைப் பெற்றனர். 

நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்க செயல்திறனாளர்களில், சிறந்த பிராந்திய விற்பனை முகாமையலராகத் தெரிவுசெய்யப்பட்ட நுகேகொட கிளையைச் சேர்ந்த திரு. ஏ.எஸ்.சமரசிங்க் சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகர் - புதியவர் பிரிவில் சிறந்தவராகத் தெரிவுசெய்யப்பட்ட கொலன்னாவ கிளையைச் சேர்ந்த திருமதி. எஸ். ஆர். ஏ. ஆர் குமாரி; அனுபவமிக்கவர் பிரிவில் சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகராகத் தெரிவுசெய்யப்பட்ட அம்பலாந்தோட்டை கிளையைச் சேர்ந்த திரு. ஏ. ஐ. பி மஞ்சுள் சிறந்த விற்பனை அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண கிளையைச் சேர்ந்த திருமதி. எஸ். ராகினி; மற்றும் சிறந்த முகவர் நிறுவனத் தலைவராக அங்கீகரிக்கப்பட்ட வென்னப்புவ கிளையைச் சேர்ந்த திரு. ஏ. எஸ். எல். பெர்னாண்டோ ஆகியோர் அடங்குவர். 

பாராட்டு மற்றும் கொண்டாட்டத்தின் உணர்வை மேலும் சிறப்பிக்கும் வகையில், வெற்றியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ரிசோர்ட்டில் முழு உணவுடன் கூடிய தங்குமிட வசதி வழங்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான Brand Finance இன் நாட்டின் 100 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் தரவரிசையில் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட செலின்கோ லைஃப், 2026 SLIM காந்தார் மக்களின் விருதுகள் (2026 SLIM Kantar People’s Awards) விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 20-வது ஆண்டாக ஆண்டின் மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் என்ற விருதை முன்னெப்போதும் இல்லாத வகையில் வென்றுள்ள செலிங்கோ லைஃப், World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் செலிங்கோ லைஃப் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலட்சியங்களைப் பாதுகாத்து, அவற்றுடன் தொடர்புடைய இடர்களைக் குறைக்கும் வகையில், நிறுவனம் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
விரைவில் தீர்வு!

விரைவில் தீர்வு!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

யாழ். மாவட்ட சர்வமத பேரவை உருக்கம்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

இது மிகவும் மோசமான செயற்பாடாகும்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற  உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

சலசலப்பை ஏற்படுத்திய அனல் பறக்கும் விவாதம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

எங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

நாங்கள் வலியுறுத்த மட்டுமே முடியும், தவிர, தலையிட முடியாது!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

Mobitel 1278