Header Logo
Vallibel FD
Selan Bank
மலையகம்
800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

Sep 23, 2026 - 10:20 AM

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!
Mobitel Inner 1278

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயத்திலும் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி, குறித்த பகுதியில் வசிக்கும் 120 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800 இற்கும் அதிகமானோர் தமது அன்றாட தேவைகளுக்காகப் பயணித்து வருகின்றனர். பாலத்தின் தற்போதைய ஆபத்தான நிலை காரணமாக இவர்களின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

கடந்த 'டித்வா' புயலின் போது இந்தப் பாலம் ஓரளவு சேதமடைந்திருந்தது. இதுகுறித்து பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நிரந்தர தீர்வும் வழங்கப்படவில்லை என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பாலத்தின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. பாலத்தின் சில பகுதிகள் உடைந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடும் மழை பெய்யும் நேரங்களில் பாலத்தின் மீதே நீர் பாய்ந்து செல்லும் அபாயம் காணப்படுவதால், அந்தச் சமயங்களில் பாலத்தின் வழியே பாதுகாப்பாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். 

பாலத்தில் வழக்கமான முறையில் பயணிக்க முடியாத சூழல் நிலவுவதால், பொதுமக்கள் தற்காலிகமாக மரப்பலகைகளைப் போட்டு அவற்றின் மீதே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தற்காலிகப் பாதையில் பயணிக்கும் போது பாலம் அதிர்வதாகவும், அதன் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துள்ளதோடு கான்கிரீட் பகுதிகள் பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அவசர வைத்திய சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இதனால் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர். 

அவசர நோய் பாதிப்புகள் ஏற்படும் போது, நோயாளிகளை விரைவாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், யாரேனும் உயிரிழந்தால் அவரது சடலத்தைக் கூட வெளியே கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

அதேவேளை, அன்றாட வேலைகளுக்குச் செல்லும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும் பாலத்தின் இந்த மோசமான நிலையால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாலத்தின் நிலைமையைத் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். 

பாலத்தை முழுமையாகப் புனரமைக்கக் கால அவகாசம் தேவைப்பட்டால், அதுவரை மக்களின் போக்குவரத்து சீராக நடைபெறப் பாதுகாப்பான தற்காலிகப் பாதையையோ அல்லது மாற்றுப் போக்குவரத்து வசதியையோ ஏற்படுத்திக் கொடுப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்காதது குறித்து அப்பகுதி மக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். 

எனவே, மேலும் ஒரு மழைக்காலத்திற்கோ அல்லது ஏதேனும் விபத்து நடக்கும் வரை காத்திருக்காமலோ, ஐம்பது ஏக்கர் பகுதி மக்களின் உயிரையும் அன்றாட வாழ்க்கையையும் பாதுகாக்கச் சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

Mobitel 1278