Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஆடை பைக்கில் சிக்கி 26 வயது பல்கலை மாணவி உயிரிழப்பு

Sep 23, 2026 - 10:10 AM

ஆடை பைக்கில் சிக்கி 26 வயது பல்கலை மாணவி உயிரிழப்பு
Mobitel Inner 1278

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார்.

 

நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

 

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதியாண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இச்சோக விபத்து நேர்ந்துள்ளது. 

 

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை, பின்சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இச்சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

 

அத்துடன் பிரேதப் பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

Mobitel 1278