Sep 23, 2026 - 09:36 AM

வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 'குஷ்' மற்றும் 'ஹசீஸ்' போதைப்பொருள் தொகையை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றியுள்ளனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலுக்கு அமைய, தனியார் கூரியர் சேவை ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 3 கிலோகிராம் 599 கிராம் 'குஷ்' போதைப்பொருளும், 2 கிலோகிராம் 409 கிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் இருந்தபோதே இந்த போதைப்பொருள் தொகையை புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





























