Sep 19, 2026 - 10:45 PM

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை 98,616 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.
மொத்த நோயாளர்களில் 52.62% பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 14,209 ஆகும்.
மாவட்ட ரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 20,917 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 19,435 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,410 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதனிடையே, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.
மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 3,125 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
34 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்னமும் டெங்கு அதிடர்க் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.





























