Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
Groundworth இனால் தலவத்துகொட நகர மையத்தில் ‘Antara’ – பிரத்தியேக காணித் திட்டம் அறிமுகம்

Sep 18, 2026 - 12:20 PM

 Groundworth இனால் தலவத்துகொட நகர மையத்தில் ‘Antara’ – பிரத்தியேக காணித் திட்டம் அறிமுகம்
Mobitel Inner 1278

கொழும்பு நகரின் பரந்த வதிவிடப்பகுதிகளில் ஒன்றான, தலவத்துகொட பகுதியின் மையப்பகுதியில் “Antara by Groundworth” பிரத்தியேகமான காணி அபிவிருத்தியை Groundworth (Pvt) Ltd முன்னெடுக்க முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியை அண்மித்தும், பத்தரமுல்ல நிர்வாக பகுதியை அண்மித்தும் அமைந்துள்ள Antara, 12 உயர்தர வதிவிடக் காணிப்பகுதியை அமைதியான, அதிகளவு இணைப்பு வசதிகளைக் கொண்ட பகுதியில் வழங்குகின்றது. 

ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு வதிவிடச் சூழலில் அமைந்துள்ள Antara, பாடசாலைகள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து மையங்களை விரைவாக சென்றடையும் வசதியுடன், முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு முகவரியின் இலகுத்தன்மையை ஒன்றிணைக்கிறது. இப்பகுதியில் காணிப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், இக்கட்டுமானத் திட்டமானது உறுதி செய்யப்பட்ட, அதிக மதிப்பைக் கொண்ட ஒரு பகுதியில் தமக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

இந்த அறிமுகம் தொடர்பில் Groundworth Group இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், இணை- ஸ்தாபகருமான கசுன் அந்தரஹென்னதி கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பின் மிகவும் பிரசித்தி பெற்ற குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஒரு இடத்தைப் பெற்றுக்கொள்வதை Antara குறிக்கிறது. இங்கு சுற்றியுள்ள சூழலின் வலிமையானது, நிலத்திற்கு இணையான மதிப்பைக் கொண்டதாகும். பாடசாலைகள், சுகாதார சேவைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் இலங்கையின் நிர்வாக மையம் ஆகியவற்றுக்கு மிக அருகில் இருந்தவாறே, முழுமையாக வளர்ச்சியடைந்த ஒரு சூழலில் வாழ்விடத்தை அமைத்துக் கொள்வதற்கான ஒரு அரிதான வாய்ப்பை எமது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உருவாக்கியுள்ளோம்.” என்றார். 

Antara, தலவத்துகொட நகரத்தையும், சந்திப்பையும் இணைக்கும் பிரதான பாதையான பத்தரமுல்ல-பன்னிபிட்டிய வீதியில் இருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. தலைநகரின் முக்கிய இடங்களான பத்தரமுல்ல, பாராளுமன்றம் மற்றும் கொழும்பின் நிர்வாக மாவட்டம் ஆகிய அனைத்தும் சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவினுள் அமைந்திருப்பதுடன், எளிதில் சென்றடையக்கூடியவையாகவும் உள்ளன. மேலும், இக்கட்டுமானத்தைச் சுற்றி பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் அன்றாட அத்தியாவசிய வசதிகளும் சூழ்ந்துள்ளன. தியசரு பூங்கா, Antaraவிலிருந்து சுமார் 1.7 கிலோ மீற்றர் தொலைவிலும், தலவத்துகொட ஹேமாஸ் மருத்துவமனை 1 கிலோ மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளன. கெப்பிட்டல் மோலில் உள்ள கீல்ஸ் சுப்பர் மார்க்கெட் சுமார் 1.2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதுடன், SPAR, ஆர்பிகோ மற்றும் GLOMARK ஆகிய உணவக/சில்லறை விற்பனை நிலையங்களும் அருகிலேயே அமைந்துள்ளன. சென். நிக்கலஸ் சர்வதேசக் கல்லூரி மற்றும் விதுர கல்லூரி ஆகியவை இக்கட்டுமானத்திலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால், குடும்பங்களுக்குத் தேவையான கல்வி வசதிகளையும் இலகுவாக அணுக முடியும். 

6.5 பேர்ச் முதற்கொண்ட காணி அளவுகளுடன், நன்கு நிறுவப்பட்ட ஒரு நகர்ப்புறச் சூழலில் வீடொன்றைக் கட்ட விரும்புவோருக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இக்கட்டுமானத் திட்டம் வழங்குகிறது. இதில் நன்கு அமைக்கப்பட்ட 22 அடி அகல அணுகுபாதைகள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் இணைப்புகள், உறுதிப்படுத்தப்பட்ட சட்டப்பூர்வக் காணி உரிமைகள் மற்றும் அமைதியான, பசுமையான, பாதுகாப்பான குடியிருப்புச் சூழல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. காணி விலை ஒரு பேர்ச் ரூ. 3.3 மில்லியன் முதற்கொண்டு ஆரம்பமாகிறது. 

Groundworth நிறுவனத்தின் Antara திட்டம் தற்போது கள விஜயங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதுடன், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான காணித் துண்டுகள் விற்பனைக்கு எஞ்சியுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

Mobitel 1278