Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
பலரையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்!

Sep 7, 2026 - 03:07 PM

பலரையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்!
Mobitel Inner 1278

திரைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா பெயர் சொல்லாமல், பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளார். 

‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’, ‘இசபெட் ராஜாவும், இதய ராணியும்’ ஆகிய படங்களில் பாடல்களை பாடி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். அவர், தற்போது சினிமாவிலிருந்து விலகி ரிஷிகேஷில் தொழில் முனைவராக வலம் வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு இசையமைப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் தகவலை பகிர்ந்தார். 

ஆனால், அவர் அப்போது, அந்த இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடவில்லை. சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரால் தான் சினிமாவிலிருந்து விலகியதாகவும் தெரிவித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், “இனிமேல் இசைத்துறையில் என்னால் இருக்க முடியாது என்கிற சூழல் வந்துவிட்டது. நான் கொடூரமான பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். நான் தப்பித்து வந்திருக்கிறேன். 

இப்போது கூட அது பத்தி நினைக்கும் போது எனக்குக் கை நடுங்குகிறது. வேறு யாரும் இதில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக என் நண்பர்களிடம் இது குறித்து எச்சரித்தேன். ஒரு இசையமைப்பாளர்தான் என்னை துன்புறுத்தியவர். அதன் பிறகு சென்னையில் என்னால் இருக்க முடியவில்லை.” என்று கூறியிருந்தார். ஆனால், அப்போது அவர் இசையமைப்பாளரின் பெயரை வெளியிடவில்லை. 

இந்நிலையில், தற்போது மீண்டும், அந்த இசையமைப்பாளர் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் நடக்கும். பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர், அவர்களை கட்டாயப்படுத்தி உரையாட வைத்திருக்கிறார். எங்களின் கண்ணியத்தை பறித்து, பணத்தை பறித்து, மிரட்டி, பிளாக்மெயில் செய்திருக்கிறார். 

இன்று கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு, சமூக வலைதள பிம்பங்கள் குறித்தும், சமூகத்தின் மனநிலை குறித்தும், பிஆர் நடைமுறை குறித்தும் நேர்காணல்களை கொடுத்து வருகிறார். ஆன்மிக படம் ஒன்றுக்கு இசையமைக்கும் அவரை, மேடைக்கு அழைத்து இரண்டு பெண்கள் கேக் ஊட்டி வரவேற்கிறார்கள். இதை தான் சினிமா ஆதரிக்கிறது. இதை செய்ய சில பெண்களே முன் வருகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். யார் அந்த இசையமைப்பாளர்? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278